பக்கம் எண் :

838பால காண்டம்  

மிகைப் பாடல்கள்

                                                காப்பு

1.ஒன்று ஆய். இரண்டு சுடர் ஆய்.
   ஒரு மூன்றும் ஆகி.
பொன்றாத வேதம் ஒரு நான்கொடு.
   ஐம் பூதம் ஆகி.
அன்று ஆகி. அண்டத்து அகத்து ஆகி.
   புறத்தும் ஆகி.
நின்றான் ஒருவன்; அவன் நீள் கழல்
   நெஞ்சில் வைப்பாம்.
 

ஒன்றாய் - பரம்பொருள் ஒன்றால்; இருசுடர் - பரிதி. மதி என்று
இருசுடர்;ஒரு மூன்று - பிரமன்-திருமால்-சிவன்; பொன்றாத வேதம் -
அழியாத வேதம்; அன்று - இல்லை; நீள்கழல் - நெடிய பாதம்.
 

2.நீலம் ஆம் கடல். நேமி அம் தடக் கை
மாலை மால் கெட. வணங்குதும் மகிழ்ந்தே.
 

நீலம்   ஆம் கடல் - கடல் போன்ற நீல நிறமும்;  நேமி   அம்
தடக்கை  
- திரு வாழி ஏந்திய நீண்ட கைகளையும் உடைய; மாலை -
திருமாலை; மால்கெட  -  மயக்கம்  நீங்க;  மகிழ்ந்து வணங்குதும் -
மகிழ்ந்து வணங்குவோமாக.
 

3.காயும் வெண் பிறை நிகர் கடு ஒடுங்கு எயிற்று
ஆயிரம் பணாமுடி அனந்தன் மீமிசை.
மேய நான்மறை தொழ. விழித்து உறங்கிய
மாயன் மா மலர் அடி வணங்கி ஏத்துவாம்.
 

கடு - நஞ்சு; விழித்து உறங்கல்- அறிதுயில்; ஆயிரம் பணா முடி
-   ஒப்பு  பரிபாடல்.  ‘கடுவொடு  ஒடுங்கிய   தூம்புடை   வால்எயிறு’
முருகாற்றுப்படை; மாயன் - கரியன்; மாயம் வல்லவன்.