பெறல் அருஞ் சூழ்ச்சியர் - பெறுவதற்கு அரிய ஆராய்ச்சி நிறைந்த அமைச்சர்கள்; மறுதிரைக் கடல் என - மடங்கி விழும் அலைகளையுடைய கடல்போல ; வந்து சுற்றினார் - அரசவைக்கு வந்து நிறைந்தார்கள். கம்பர், அமைச்சர் மிகப் பலர் என்பதனைச் சுட்ட அறுபதினாயிரம் என்னும் எண்ணைக் குறிக்கிறார். இவ்வாறே தசரதன் ஆட்சிபுரிந்த காலம் அறுபதினாயிரம் ஆண்டு(182), அவன் மனைவியர் அறுபதினாயிரவர் (1779), சனகன் அவைக்கு வில்லைத் தூக்கிவந்த வீரர்அறுபதினாயிரவர் (668) என்றும் குறிப்பர். பெருவேந்தர்களுக்கு எல்லாம் அறுபதினாயிரம் என்று குறித்தல் சிலரது போக்கு. சூழ்ச்சி - பலகால் எண்ணுதல் ; ஆராய்ச்சி. 10 1324. | முறைமையின் எய்தினர் முந்தி, அந்தம் இல் அறிவனை வணங்கி, தம் அரசைக் கைதொழுது, இறையிடை வரன்முறை ஏறி, ஏற்ற சொல் துறை அறி பெருமையான் அருளும் சூடினார். |
முறைமையின் எய்தினர் - அவ் அமைச்சர்கள் அரசவைக்குச் செல்லுதற்குரிய முறைப்படியே அணுகி ; முந்தி அந்தம் இல் அறிவனை வணங்கி -முதலில் முடிவில்லாத அறிவினையுடைய வசிட்ட முனிவனைப் பணிந்து ; தம் அரசைக்கைதொழுது - பின்னர்த் தம் அரசனாகிய தசரதனைக் கைகூப்பிக் கும்பிட்டு ; இறையிடை வரன்முறை ஏறி - தம் இருக்கைகளில் வரிசைக்கேற்ப ஏறி ; ஏற்ற சொல்துறை அறி பெருமையான் - சூழ்நிலைக்குத் தக்கவாறு பேசும் முறைமை அறிந்த பெருமைக்குரியமன்னன் ; அருளும் சூடினார் - அருட்பார்வையையும் பெற்றார்கள். அந்தம் இல் அறிவன் - பேரறிவு நிறைந்தவன் ; பிரம ஞானம் வாய்க்கப் பெற்றவன். வணங்குதல் - குனிந்து நிலம் தொட்டுப் பணிதல் ; தண்டன்சமர்ப்பித்தல். கைதொழுதல் - நின்றவாறே கைகூப்பிப் பணிதல். இறை - தவிசு. 11 தயரதன் தன் உளக் கருத்தை வெளியிடுதல் 1325. | அன்னவர், அருள் அமைந்து இருந்த ஆண்டையில், மன்னனும், அவர் முகம் மரபின் நோக்கினான் ; ‘உன்னிய அரும் பெறல் உறுதி ஒன்று உளது ; என் உணர்வு அனைய நீர் இனிது கேட்டிரால் ! |
அன்னவர் - அந்த அமைச்சர்கள் எல்லோரும் ; அருள்அமைந்து இருந்த ஆண்டையில் - மன்னன் அருளைப் பெற்று இருக்கையில் அமர்ந்திருந்தஅக்காலத்தில் ; மன்னனும் அவர் முகம் - தயரதனும் அவர்களது முகத்தை ; மரபினன் நோக்கினான் - முறையாகப் பார்த்தான் ; |