தயரதனுக்குப் பயந்து; அக்கனி வாய்ச் சீதை தந்தை- அந்தக் கொவ்வைக் கனிபோலச்சிவந்த வாயையுடைய சீதையின் தந்தையாகிய சனகன்; உன் தாதையைத் தெறுகிலன் - உன்னுடையதந்தையாகிய கேகய ராசன் மீது படையெடுத்து அழித்திலன்; அவன் இராமன் மாதுலன் - அந்தசனகன் இராமனுக்கு மாமன்; நுந்தைக்கு இனி வாழ்வு உண்டோ!? - (இராமன் சக்கரவத்தியானால்சனகன் கை ஓங்கிவிடும்) உன் தந்தையாகிய கேகயனுக்கு இனி வாழ்வு உண்டா? (அழிவுதான்); உன்துணை- உன்னளவுக்கு; பழிபடப் பிறந்தார் யார் உளர்? - பழி உண்டாகும் படி பிறந்தவர்கள்யார் இருக்கின்றார்கள்’ (ஒருவரும் இல்லை). புகழ் இல்லாமற் போனாலும் போகட்டும் என்றால், பழியல்லவா உண்டாகும் போல் உள்ளதேஎன்றாள் கூனி, தசரதனுக்குக் கட்டுப்பட்டு சனகன் சும்மா இருக்கிறான்; எதிர்காலத்தில் இராமன்அரசனானால் சனகன் சும்மா இரான் என்றாள். சனகனுக்கும் கேகயனுக்கும் இயற்கையில் பகை உண்டு என்பதும்இதனால் விளங்கும். 82 1481. | ‘மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள; மறத்தார் செற்றபோது, இவர் சென்று உதவார் எனில், செருவில் கொற்றம் என்பது ஒன்று, எவ் வழி உண்டு? அது கூறாய்! சுற்றமும் கெட, சுடு துயர்க் கடல் விழத் துணிந்தாய்! |
‘மற்றும்- மேற்சொல்லியதன்மேலும்; நுந்தைக்கு - உன் தந்தையாகிய கேகயனுக்கு;வான் பெரிது பகை உள - மிகப் பெரிய பகைகள் இருக்கின்றன; மறத்தார் - அப்பகைவர்கள்; செற்ற போது - (உன் தந்தையை அழிக்கப்) போரிட முனைந்தபோது; இவர்- கோசல நாட்டார்; சென்று உதவார் எனில் - (உன் தந்தைக்கு உதவி யாகச்) சென்றுபோரில் உதவாவிட்டால்; செருவில் - சண்டையில்; கொற்றம் என்பது ஒன்று - வெற்றி என்பதாகிய ஒன்று; எவ்வழி உண்டு? - எப்படி எவ்விதத்தில் (உன் தந்தைக்கு)உண்டாகும்; அது கூறாய் - அந்த வழியைச் சொல்லு (ஆகவே); சுற்றமும் கெட - உறவின்முறையாரும் அழிய; சுடு துயர்க்கடல் விழ - சுடுகின்ற துன்பக் கடலில் (நீயும்) விழுவதற்கு;துணிந்தாய் - உறுதி கொண்டு விட்டாய் ( போலும்).’ இறுதி வரியை விளியாகவும் கொள்ளலாம். சனகன் போர் செய்யாவிடினும்வேறு அரசர்கள் உன் தந்தையோடு போர்செய்ய வரின் இராமன் உதவ வருவானோ? வாரான். எனவே, நீஉன் குலத்தையும் அழிக்க வழி செய்து |