போல; உயிர்ப்பு அடங்கி ஓயும் - மூச்சு அடங்கி ஒய்வான்; பாவியை எதிர் உற்றுப்பற்றி - கைகேயியை எதிரே சென்று பிடித்து; எற்ற - மோத; எண்ணும் - நினைப்பான். இதனால் தயரதனது கலக்கநிலை உணர்த்தப்படுகிறது. இராமன்மீது இரக்கமின்றிக் கேடு சூழ்ந்தாளாதலின்கைகேயி பாவி என்று குறிக்கப்பட்டாள். 18 1509. | பெண் என உட்கும்; பெரும் பழிக்கு நாணும்; உள் நிறை வெப்பொடு உயிர்த்து, உயிர்த்து, உலாவும்; கண்ணினில் நோக்கும் அயர்க்கும் - வன் கைவேல் வெம் புண் நுழைநிற்க உழைக்கும் ஆனை போல்வான். |
வன் கை வேல் - வன்மையான கையினால் வீசப்பட்ட வேல்; வெம் புண் நுழைநிற்க- கொடிய புண்ணில் நுழைவதனால்; உழைக்கும் ஆனை போல்வான் - வருந்தும் யானைபோன்றமன்னன்; பெண் என உட்கும் - பெண் என்று கருதிக் கொல்ல அஞ்சும்; பெரும் பழிக்கு- (கைகேயியைப் பற்றி எற்றுவதனால்) வரக்கூடிய பெரிய பழிச்சொல்லுக்கு; நாணும் -நாணுவான்; உள் நிறை வெப்பொடு - தன்னுள்ளே மிக்கிருந்த தாபத்தோடு; உயிர்த்து உயிர்த்து - பலகால் பெருமூச்சு விட்டு; உலாவும் - அங்கும் இங்குமாக அலைவான்; கண்ணினில் நோக்கும் அயர்க்கும் - (கைகேயியைக்) கண்ணால் உற்றுப் பார்த்துப் பின்னர்ச் சோர்வான். கைகேயியைக் கொன்றுவிடலாமா என்ற கருதி தயரதன் அதனால் உண்டாகும் பழிக்கு நாணிஅதனைச் செய்யாமல் விடுத்தான். நாணுதலாவது தனக்குப் பொருந்தாத இழிந்த செயலில் மனம் ஒடுங்குதல். முதல் வரம் கொடும்புண் செய்ய, இரண்டாவது வரம் அப்புண்ணில் வேலை எடுத்து நழைத்தாற்போன்ற மிகுந்த துன்பம் விளைத்தது. 19 கைகேயியின் கலங்கா உள்ளம் 1510. | கம்ப நெடுங் களி யானை அன்ன மன்னன் வெம்பி விழுந்து எழும் விம்மல் கண்டு, வெய்துற்று, உம்பர் நடுங்கினர்; ஊழி பேர்வது ஒத்தது; அம்பு அன கண்ணவள் உள்ளம் அன்னதேயால். |
கம்ப நெடுங் களி யானை அன்ன மன்னன் - கட்டுத்தறியில் கட்டுண்ட மிக்க மதத்தையுடையகளிற்றை யொத்த அரசனாகிய |