பக்கம் எண் :

12அயோத்தியா காண்டம்

முடிசூடி ஆளத் தொடங்கிய தனக்கே உரியதாகப் பிறர்க்குப் பொதுவாகாது
நாட்டைக் காத்தல் ‘கற்பின்’ காத்தலாகும். கைதர - உதவ ; ‘இச்சுமையைத்
தூக்க ஒரு கைதா’ என்னும் பேச்சு வழக்கிலும் இதற்கு இப்பொருள்
இருத்தல் காணலாம். பின்னும், “மறுஅறுகற்பினில் வையம் யாவையும்,
அறுபதினாயிரம் ஆண்டும் ஆண்டவன்” (2446) என வருதல் காணலாம்.
என் உயிர், இராகுத்தலை என்பதுபோல ஒற்றுமைக் கிழமைப் பொருளில்
வந்த ஆறாம் வேற்றுமைதொகை. என் உயிர்க்கு உறுவது என்றது
தவத்தைக் குறித்தது ;  உம்மை, இறந்தது தழீஇயது.                  14

1328. ‘விரும்பிய மூப்பு எனும் வீடு கண்ட யான்,
இரும் பியல் அனந்தனும், இசைந்த யானையும்,
பெரும் பெயர்க் கிரிகளும் பெயர, தாங்கிய
அரும் பொறை இனிச் சிறிது ஆற்ற ஆற்றலேன்.

     ‘விரும்பிய மூப்பு எனும் வீடு - நெடுங்காலமாக விரும்பியிருந்த
மூப்புப் பருவமாகிய (அரச பதவியிலிருந்து) விடுதலை பெறுதற்குரிய
காலத்தை ; கண்ட யான் - அடைந்த யான்; இரும் பியல் அனந்தனும் -
பெரிய பிடரினையுடைய ஆதிசேடனாகியபாம்பும் ; இசைந்த யானையும்-
திக்குகளில் பொருந்திய யானைகளும் ;  பெரும் பெயர்க் கிரிகளும் -
மிக்க புகழ் வாய்ந்த எட்டுக் குல மலைகளும் ;  பெயர - (பூமியைச்
சுமக்கும் தொழிலிருந்து) நீங்க ;  தாங்கிய அரும் பொறை - யான்
சுமந்த அரிய பாரத்தை ;  இனிச் சிறிது ஆற்ற ஆற்றலேன் - இனிமேல்
சிறிதளவும் சுமக்க வல்லேனல்லேன்.’

     இரான் பிறந்தபின் தான் அரசாட்சியை விட்டுத் தவஞ் செய்யச் செல்ல
வேண்டும் என்ற விருப்பத்தோடு இருந்தவனாதலின் ‘விரும்பிய மூப்பு எனும்
வீடு’ என்றான். பியல்- பிடரி. திசை யானைகள் - ஐராவதம், புண்டரீகம்,
வாமனம், குமுதம், அஞ்சனம், புட்ப தந்தம்,சார்வ பௌமம், சுப்பிரதீபம்
என்பன. னுட்டுக் குலமலைகள் - இமயம், மந்தரம், கைலாசம்,விந்தம்,
நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம் என்பன.

1329.‘நம் குலக் குரவர்கள், நவையின் நீங்கினார்,
தம் குலப் புதல்வரே தரணி தாங்கப் போய்,
வெங் குலப் புலன் கெட, வீடு நண்ணினார் ; 
எங்கு உலப்புறுவர், என்று எண்ணி, நோக்குகேன்.

     ‘நவையின் நீங்கினார் - குற்றங்களினின்று நீங்கியவர்களாகிய ; நம்
குலக் குரவர்கள்
- எம் குலத்தில் தோன்றிய பெரியோர்கள் ;  தம்குலப்
புதல்வரே
- தம் மேலான பிள்ளைகளே ;  தரணி தாங்க - நிலவுலகைப்
போற்றிக் காக்க ;  போய் - தாம் காட்டிற்குச் சென்று ; வெம்குலப்புலன்
கெட
- கொடிய கூட்டமாகிய ஐம்புல ஆசைகள் அற்று ஒழிய ;  வீடு
நண்ணினார் -வீடுபேறு அடைந்தவர்கள் ; எங்கு உலப்பு உறுவர் என்று-
எங்கு எண்ணிக்கையில்முடிவு பெறுவர் என்று ;  எண்ணி நோக்குகேன்-
எண்ணிப் பார்க்கின்றேன்.’