தயரதன்; வெம்பி விழுந்து எழும் விம்மல் - மனம் நொந்து கீழே விழுந்து எழுகின்றதுன்ப நிலையினை; உம்பர் கண்டு - தேவர்கள் பார்த்து; வெய்துற்று நடுங்கினர் -மனம் புழுங்கி நடுங்கினார்கள்; ஊழி பேர்வது ஒத்தது - பிரளய காலம் வந்தது போன்றிருந்தது; அம்பு அன கண்ணவள் உள்ளம் - (அந்நிலையிலும்) அம்பு போன்ற கண்களையுடைய கைகேயியினது மனம்; அன்னதே - முன்பு இருந்த அதே தன்மையில் இருந்தது. தயரதன் சம்பரனைத் தொலைத்துத் தங்களுக்கு உதவியவன் ஆதலால் அவனது துன்பத்தைக் கண்டு தேவர்கள்வருந்தினர். உலகத்தவர் யாவரும் வருந்துதலால் ‘ஊழிபேர்வது ஒத்தது’ என்றார். அந்நிலையிலும்கைகேயி சிறிதும் மனம் இளகாமல் ‘உறுதியோடு இருந்தாள் என்று அவளது கொடுமை குறித்தார். கட்டுத்தறியில்கட்டப்பட்ட யானை போல என்றும் உவமை வரத்தால் பிணிப்புண்ட தயரதன் நிலையினைக் காட்டுவது,‘ஏ, ஆல் அசை. 20 1511. | அஞ்சலள், ஐயனது அல்லல் கண்டும்; உள்ளம் நஞ்சிலள்; ‘நாண் இலள்’ என்ன, நாணம் ஆமால்; ‘வஞ்சனை பண்டு மடந்தை வேடம்’ என்றே தஞ்சு என மாதரை உள்ளலார்கள், தக்கோர். |
ஐயனது அல்லல் கண்டும் அஞ்சலள் - (தன்) கணவனது துன்பத்தைக் கண்டும் அவள் அச்சம்கொள்ளவில்லை; உள்ளம் நஞ்சிலள்- மனம் இரங்கவில்லை; ‘நாண் இலள்’ என்ன -‘வெட்கப்படவும் இல்லை’ என்று அவள் நிலையைக் கூற; நாணம் ஆம் - (சொல்லும்) நமக்கே வெட்கம் உண்டாகும்; தக்கோர் - சால்புடைய பெரியோர்; ‘பண்டு - தொன்றுதொட்டே;வஞ்சனை - வஞ்சனை என்பது; மடந்தை வேடம் - பெண்ணுருவம்;’ என்றே -என்று எண்ணியே; மாதரை - பெண்களை; தஞ்சு என - பற்றுக்கோடு என்று; உள்ளலார்கள்- நினையார்கள். பெண்மைக் குணங்கள் யாதுமின்றி இருந்த கைகேயி நிலைபற்றிக் கூறுவது நாணம் தருகிறது என்கிறார்கம்பர். ஐயன் - கணவன், தலைவன், நஞ்சிலள் - நைந்திலள் என்பதன்போலி. தஞ்சு - தஞ்சம்என்பதன் விகாரம். ‘ஆல்’ அசை. 21 தயரதன் மீண்டும் வினவுதல் 1512. | இந் நிலை நின்றவள் தன்னை எய்த நோக்கி, நெய்ந் நிலை வேலவன், ‘நீ திசைத்தது உண்டோ? பொய்ந் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ? உன் நிலை சொல்; எனது ஆணை உண்மை!’ என்றான். |
இந் நிலை நின்றவள் தன்னை - இந்நிலையில் நின்ற கைகேயியை; எய்த நோக்கி- பொருந்தப் பார்த்து; நெய்ந் நிலைவேலவன் - நெய் |