பக்கம் எண் :

கைகேயி சூழ்வினைப் படலம் 121

பூசப்பட்ட வேலையுடைய தயரதன்; ‘நீ திசைத்தது  உண்டோ - நீ மனம்
பிரமித்தது உண்டோ?; பொய்ந் நிலையோர்கள் புணர்த்த - வஞ்சத்
தன்மையுடையவர்கள் எவரேனம் கட்டிச்சொன்ன;வஞ்சம் உண்டோ -
வஞ்சனைச் சொல் உள்ளதோ?; எனது ஆணை - என் மேல் ஆணையாக;
உன் நிலை உண்மை சொல் - இந்த உனது நிலையின் காரணத்தை
உண்மையாகச் சொல்வாய்;’என்றான் -.

     தயரதனுக்குக் கைகேயியின் மாறுபட்ட நிலை வியப்பாக இருத்தலின்,
‘நீ திசைத்தது உண்டோஅல்லது  பொய்ம்மையாளர்கள் எவரேனும் உன்
மனத்தைக் கெடுத்தனரோ?’ என்கிறான். முன்பு இராமன்மீதுஆணையிட்டுக்
கூறியவன் இப்பொழுது அவளக்கு அவன்பால் அன்பின்மையை உணர்ந்து
தன்மேல் ஆணை என்றான். திசைத்தல் - திகைத்தல்; பிரமித்தல்.      22

கைகேயியின் கொடுஞ் சொற்கள்  

1513.‘திசைத்ததும் இல்லை;
     எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை; முன் ஈந்த
     இவ் வரங்கள்,
குசைப் பரியோய்! தரின், இன்று
     கொள்வென்; அன்றேல்,
வசைத் திறன் நின்வயின் நிற்க,
     மாள்வென்’ என்றாள்.

     குசைப் பரியோய் - (மன்னன் கூறக் கேட்ட கைகேயி அவனிடம்)
‘கடிவாளம் பூட்டிய குதிரைகளைஉடைய அரசே!; திசைத்ததும் இல்லை -
நான் திகைத்ததும் இல்லை;  தீயோர் எனக்குவந்து  இசைத்ததும்
இல்லை
- கொடியோர் எவரும் என்னிடம் வந்து வஞ்சனையாகச்
சொன்னதும் இல்லை; முன் ஈந்த இவ் வரங்கள் - முன்னே (வாயாற்)
கொடுத்த இவ்விரண்டு வரங்களை; இன்று தரின் கொள்வென் -
இப்பொழுது  கொடுத்தால் பெற்றுக்கொள்வேன்; அன்றேல்- அன்றிக்
கொடுக்காமல் போனால்;  வசைத்திறன் நின்வயின் நிற்க - பழியின்
கூறுகள் நின்னிடம் நிலையாக இருக்குமாறு;  மாள்வென் - இறப்பேன்;’
என்றாள் -.

     தயரதன் சொற்களால் அவனுக்குத் தான் கேட்ட வரங்களைத் தர
விருப்பமில்லை என்று உணர்ந்தகைகேயி, ‘வரம்கொடுத்தால் வாழ்வேன்;
இன்றேல் சாவேன்’ என்கிறாள். குசைப்பரியோய் -கருத்துடை யடைகொளி.
யான் குதிரையைச் செலுத்தித் தேர் ஊர்ந்ததனால் அல்லவா நினக்குப்புகழ்
உளதாயிற்று என்று குறிப்பித்தவாறு. கருத்துடை அடைகொளி அணி.    23