| என் மகன், என் கண், என் உயிர், எல்லா உயிர்கட்கும் நன்மகன் இந்த நாடு இறவாமை நய’ என்றான். |
‘நின்மகன் ஆள்வான்- ‘உனக்கு மகனாகிய பரதன் ஆட்சி புரிவான்; நீ இனிதுஆள்வாய் - நீ இன்பமாக அதிகாரம் செலுத்துவாய்; நிலம் எல்லாம் - மண்ணுலகம்முழுதும்; உன் வயம் ஆமே - உன் வழிப்பட்டதாக ஆகும்; ஆளுதி - ஆட்சிபுரிவாய்;தந்தேன் - கொடுத்தேன்; உரை குன்றேன் - பேச்சுத் தவறமாட்டேன்; என்மகன் - எனக்கு மகனும்; என் கண் - எனக்குக் கண்போன்றவனும்; என் மகன் - அனைத்து உயிர்களுக்கும் சிறந்த பிள்ளை போன்றவனுமான இராமன்; இந்த நாடு இறவாமை -இந்த நாட்டை விட்டு வெளியேறாமை மட்டும்; நய - விரும்பிடுவாய்;’ என்றான் -. இப்பாட்டின் பிற்பாதி தயரதன் இராமன்மீது கொண்டிருந்த அன்பின் மிகுதியையும், இராமன்சிறப்பையும் தெரிவிக்கிறது. ‘உன் உயிர்க்கு என நல்லன் மன்னுயிர்க்கு எலாம்’ (1350) எனவசிட்டன் உரைத்தது ஒப்பு நோக்கத்தக்கது. 36 1527. | ‘மெய்யே; என்தன் வேர் அற நூறம் வினை நோக்கி நையாநின்றேன், நாவும் உலர்ந்தேன்; நளினம்போல் கையான், இன்று, என் கண் எதிர்நின்றும் கழிவானேல், உய்யேன்; நங்காய்! உன் அபயம் என் உயிர்’ என்றான். | ‘மெய்யே - ‘சத்திமே; என்தன் வேர் அற நூறும் - எனது மூலம் கெடும்படிஅழிக்கும்; வினைநோக்கி - எனது தீவினையை எண்ணி; நையா நின்றேன் - வருந்துகின்றேன்; நாவும் உலர்ந்தேன் - (உன்னோடு பேசிப் பேசி) நாக்கும் வறளப் பெற்றேன்; இன்று - இந்நாளில்; நளினம் போல் கையான் - தாமரை போலும் கைகளையுடைய இராமன்;என் கண் எதிர்நின்றும் கழிவானேல் - என் பார்வையினின்று நீங்கிக் காடு செல்வான்என்றால்; உய்யேன் - யான் பிழைத்திருக்கமாட்டேன்; நங்காய் - (ஆதலால்)பெண்ணே!; என் உயிர் உன் அபயம் - என்னுடைய உயிர் உன் அடைக்கலம் ஆகும்’; என்றான்-. தயரதன் இராமன் காடு சென்றால் தன் உயிர் நீங்கிவிடும் என்பதனைத் தெரிவித்துத் தன்னைக்காத்திடுமாறு கைகேயியை வேண்டினான். 37 |