ஆண்பாலாரே -(அவர்கள்) ஆண்மக்களே; பெண்பால் ஆரோடு அடைவு அம்மா - பெண்ணினத்தில் யாரோடுசார்ந்தவர் ஆவார்?’ (ஒருவரோடும் சார்ந்தவர் அல்லர்) பெண்களுக்குரிய சிறந்த பண்புகள் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்பன. உபலட்சணத்தால் பயிர்ப்பும் கொள்ளத் தக்கது. நாணம் - தகாதவற்றின்கண்உள்ளம் ஒடுங்குதல்; மடம் - அனைத்தும் அறிந்தும் அறியாதது போல் இருத்தல்; அச்சம் - என்றும்காணாததைக் கண்டவிடத்து அஞ்சுதல்; பயிர்ப்பு - தன் கணவன் அல்லாதவரின் கைமுதலியன மேற்படின் அருவருத்தல். ஆண்பாலாரே - ஏகாரம் தேற்றம்; நணுகாரே - ஏகாரம் அசை; அம்மா - வியப்பிடைச்சொல். 43 1534. | ‘மண் ஆள்கின்றார் ஆகி, வலத்தால் மதியால் வைத்து எண்ணா நின்றார் யாரையும், எல்லா இகலாலும், விண்ணோர்காறும், வென்ற எனக்கு, என் மனை வாழும் பெண்ணால் வந்தது, அந்தரம் என்னப் பெறுவேனோ?’ |
‘மண் ஆள்கின்றார் ஆகி - நாட்டை ஆளுகின்ற அரசர்களாகப் பட்டம் ஏற்று; வலத்தால் - வலிமையாலும்; மதியால் - அறிவினாலும்; வைத்து எண்ணாநின்றார்யாரையும் - மேலாக வைத்துப் போற்றப்படுகின்ற அரசர்கள் எல்லாரையும்; விண்ணோர்காறும்- தேவர்கள் வரையிலும்; எல்லா இகலாலும் - எல்லாப் போரிலும்; வென்ற எனக்கு- வெற்றி கொண்ட எனக்கு; என்மனை வாழும் பெண்ணால் - என் அரண்மனையில் வாழும்பெண்ணினால்; அந்தரம் வந்தது என்னப் பெறுவேனோ - முடிவு நேர்ந்தது என்று சொல்லத்தக்க நிலையை அடைவேனோ!’ வலமும் மதியும் நிறைந்த மன்னர்களை வென்ற எனக்கு அவையில்லாத மனைவியால்முடிவுவந்துவிடுமோ என்கிறான். மனை வாழும் பெண் - மனைவி இகலால் - உருபுமயக்கம். 44 1535. | என்று, என்று, உன்னும்; பன்னி இரக்கும்; இடர் தோயும்; ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும்; ‘உயிர் உண்டோ? இன்று! இன்று! ’ என்னும் வண்ணம் மயங்கும்; இடையும் - பொன் - |
|