| குன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது என்னக் குவி தோளான். |
பொன்குன்று ஒன்று - பொன்மலை ஒன்று; ஒன்றோடு ஒன்றியது என்ன - மற்றொருபொன்மலையோடு கூடியது என்னுமாறு; குவி தோளான் - திரண்ட தோள்களையுடைய தயரதன்; என்று என்று உன்னும் - முற்கூறியவாறு பலபடியாக நினைப்பான்; பன்னி இரங்கும் - வாயினால் பல சொல்லி வருந்துவான்; இடர் தோயும்- துன்ப வெள்ளத்தில் அழுந்துவான்; ஒன்று ஒன்று ஒவ்வா - ஒன்றோடு ஒன்று பொருந்தாத; இன்னல் உழக்கும் - பலவகைத்துன்பங்களால் வருந்துவான்; உயிர் உண்டோ - மூச்சு இருக்கிறதோ; இன்று இன்று என்னும்வண்ணம் - இல்லை இல்லை என்று கூறும்படி; மயங்கும் - மூர்ச்சையுறுவான்; இடையும்- (நெஞ்சம்) உடைவான். தோய்தல் என்னும் வினைக்கு ஏற்றவாறு இடர் வெள்ளமாக உரைக்கப் பட்டது. ‘பொன் குன்றுஒன்று ஒன்றோடு ஒன்றியது என்ன’ - இல்பொருள் உவமை. 45 கைகேயி, ‘உரை மறுத்தால் உயிர் விடுவேன்’ எனல் 1536. | ஆழிப் பொன் - தேர் மன்னவன் இவ்வாறு அயர்வு எய்தி, பூழிப் பொன் - தோள் முற்றும் அடங்கப் புரள் போழ்தில், “ஊழின் பெற்றாய்” என்று உரை; இன்றேல், உயிர் மாய்வென்; பாழிப் பொன் - தார் மன்னவ!’ என்றாள், பகை அற்றாள். |
ஆழிப் பொன் தேர் மன்னவன் - சக்கரங்களையுடைய பொன்னால் ஆகிய தேரையுடையதயரதன்; இவ்வாறு அயர்வு எய்தி - இப்படித் தளர்ச்சி அடைந்து; பொன் தோள் முற்றும்பூழி அடங்க - அழகிய தன் தோள்கள் முழுவதும் புழுதி போர்க்க; புரள் போழ்தில் -(தரையில்) உருளும்போது; பசை அற்றாள் - நெஞ்சில் ஈரமில்லாத கைகேயி; ‘பாழி பொன் தார் மன்னவ - பெருமை பொருந்திய பொன் மாலை அணிந்த அரசே; ஊழின் பெற்றாய்- முறையாகப் பெற்றாய்; என்று உரை - என்று உன்வாயால் சொல்; இன்றேல் -அவ்வாறு சொல்லாவிட்டால்; உயிர் மாய்வென் - நான் உயிரைப் போக்கிக்கொள்வேன்;’என்றாள் -. இப்பாட்டு, கைகேயியின் கல்நெஞ்சைக் காட்டுகிறது. ‘மன்னவ’ என்னும் விளி சொன்னசொல்லைக் காத்தலும், அறத்தைப் போற்றுதலும் அரசனாகிய |