இறுந்துவிடுவான் என்று கருதி;’ இவ் வரம் ஈந்தேன் ஈந்தேன் - இந்த வரங்களைக் கொடுத்தேன்,கொடுத்தேன்; என் சேய் வனம் ஆள - என் மகன் இராமன் காட்டை ஆள; நான் மாய்ந்துபோய் - யான் இறந்துபோய்; வான் உலகு ஆள்வென் - விண்ணுலகை ஆள்வேன்; நெடிது- நெடுங்காலம்; நின் மகனோடும் - (நீ) நின் பிள்ளையாகிய பரதனுடன் கூடி; வசை வெள்ளம் - பழியாகிய கடலை; நீந்தாய் நீந்தாய் - கடக்க முடியாமல் அதனுள்நீந்திக்கொண்டே இருப்பாய்;’ என்றான் -. தயரதன், வரம் தராவிட்டால் கைகேயி உயிரை விடுதல் உறுதி என்று அஞ்சி, ‘ஈந்தேன், ஈந்தேன்’ என்று விரைந்து கூறினான். இவ் அடுக்கு - தேற்றத் தையும் வெகுளியையும் காட்டுவது. வீய்ந்தாள்- துணிவு பற்றி இறந்த காலத்தில் கூளினார். 48 தயரதன் துயர் கொள்ள, கைகேயி துயிர் கொள்ளல் 1539. | கூறா முன்னம், கூறுபடுக்கும் கொலை வாளின் ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்திடை மூழ்க, தேறான் ஆகிச் செய்கை மறந்தான்; செயல் முற்றி, ஊறா நின்ற சிந்தையினாளும் துயிலுற்றாள். |
கூறா முன்னம் - (தயரதன் இவ்வரத்தை ஈந்தேன் என்று, கூறி முடிப்பதற்குள் முன்னே;கூறுபடுக்கும் - இரு கூறாகப் பிளக்கின்ற; கொலைவாளின் ஏறு ஆம் என்னும் -கொலைத் தொழிலையுடைய வாளின் தாக்குதலோடு ஒத்ததாகும் என்று சொல்லத்தக்க; வன் துயர் ஆகத்து இடை மூழ்க - கொடிய துன்பம் மனத்தில் புக; தேறான் ஆகி - உணர்வற்றவன்ஆகி; செய்கை மறந்தான் - செயல்மறந்து மயங்கினான்; செயல்முற்றி - (தன்காரியம்) முடிவுற்றதனால்; ஊறா நின்ற சிந்தையினாளும் - மகிழ்ச்சி ஊறுகின்ற மனமுடையகைகேயியும்; துயிலுற்றாள் - உறங்கினாள். இப்பாட்டில், தயரதன் துயரினால் செயலற்றுக் கிடக்க, கைகேயி மகிழ்ச்சியினால் மெய்ம்மறந்துதூங்கினாள் எனக் துயருற்றார்க்கும் மகிழ்ச்சியடைந்தார்க்கும் ஒரேநிலை நிகழ்ந்த தன்மை கூறப்பட்டது.வாள் ஏறு - வாளின் தாக்குதல். இடியேறு என்பது போல, செயல் முற்றலாவது - தான் வேண்டிய வரங்களைப்பெற்றுக்கொண்டது. 49 இரவு கழிதல் எழுசீர் ஆசிரிய விருத்தம் 1540. | சேண் உலாவிய நாள் எலாம் உயிர்ஒன்று போல்வன செய்து, பின் |
|