| பிறப்பு எனும் பெருங் கடல் பிழைக்கல் ஆகுமோ? |
இம்மை யாவர்க்கும் - இப்பிறப்பிலே எவர்க்கும் ; இறப்பு எனும் மெய்ம்மையை - சாவு உண்டு என்னும் உண்மையை ; மறப்பு எனும் அதனின்மேல் - மறத்தல் என்னும் அதற்கு மேற்பட ; கேடு மற்று உண்டோ - கெடுதல் வேறு உண்டோ? (இல்லை) ; துறப்பு எனும் தெப்பமே - துறத்தல் என்னும்மிதவையே ; துணை செய்யாவிடின் - உதவி செய்யாவிட்டால் ; பிறப்புஎனும் பெருங்கடல் - பிறப்பு என்னும் பெரிய கடலினின்று ; பிழைக்கல் ஆகுமோ- தப்புதல் இயலுமேடா? இயலாது. யாக்கை நிலையாமையை எஞ்ஞான்றும் மனத்துக் கொண்டால் அது பிறவியைஒழித்தற்கு இன்றியமையாத துறவினை மேற்கொள்ளச் செய்யும் ; செய்யவே, பிறவிப் பெருங்கடல்கடத்தலாகும் என்பது கருத்து. காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின் பிறவிப் பெருங்கடல் என்றார். “பிறவிப் பெருங்கடல்” (குறள், 10) என்பர் திருவள்ளுவரும். பிழைக்கல்- தப்புதல், உய்தல். 20 1334. | ‘அருஞ் சிறப்பு அமைவரும் துறவும், அவ் வழித் தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் ஆய், வரும் பெருஞ் சிறை உள எனின், பிறவி என்னும் இவ் இருஞ் சிறை கடத்தலின் இனியது யாவதோ? |
அருஞ் சிறப்பு அமைவரும் துறவும் - அரிய சிறப்புப் பொருந்திய துறவும் ; அவ் வழி தெரிஞ்சு - அந்த வழியை அறிந்து ; உறபு என மிகும்தெளிவும் ஆய் - அதற்கு இனம் என்று சிறந்துள்ள மெய்யுணர்வும் ஆகி ; வரும்பெருஞ் சிறை உள எனின் - வருகின்ற பெரிய சிறகுகள் உண்டானால் ; பிறவிஎன்னும் இவ் இருஞ் சிறை - பிறப்பு என்னும் இந்தப் பெரிய சிறைச்சாலையை ; கடத்தலின் இனியது யாவதோ - நீங்கிச் செல்லுவதினும் இனிமையான தொன்று வேறு எதுவோ?(எதுவும் இல்லை). உயிராகிய பறவைக்குத் துறவு, மெய்யுணர்வு என்னும் இரு சிறகுகள் முளைத்துவிட்டால் அது பிறவி ஆகிய கூண்டை விட்டுப் பறந்துவிடும் என்பது கருத்து. அருஞ் சிறப்புஅமைவரும் - அடைவதற்கு அரிய வீட்டினை அடைதற்குக் காரணமான எனலும் பொருந்தும். தெரிஞ்சு - தெரிந்து என்பதன் போலி. திருவள்ளுவர் துறவையும் மெய்யுணர்தலையும் அடுத்தடுத்து வைத்துள்ளமுறைமை துறந்தார்க்கே மெய்யுணர்வு தோன்றும் எனத் தெரிவித்தல் ஈண்டுக் கருதத் தக்கது. 21 1335. | ‘இனியது போலும் இவ் அரசை எண்ணுமோ- துனி வரு புலன் எனத் தொடர்ந்து தோற்கலா நனி வரும் பெரும் பகை நவையின் நீங்கி, அத் தனி அரசாட்சியில் தாழும் உள்ளமே? |
|