பக்கம் எண் :

150அயோத்தியா காண்டம்

 உன்னல் ஆவன அல்ல என்னினும்,
     உற்றபெற்றி உணர்த்துவாம்.

     இன்ன வேலையின் - இப்படிப்பட்டவேளையில்;  ஏழு வேலையும்
ஒத்த போலஇரைத்து எழுந்து -
ஏழு கடலும் ஒருசேர இரைத்து
எழுந்தாற்போல;  அன்ன மாநகர் -அந்தப் பெரிய நகரத்தில் உள்ளார்;
இது மைந்தன் மாமுடி சூடும் வைகல் ஆம் எனா -இந்நாள் இராமன்
பெருமை பொருந்திய மகுடம் சூடும் நாள் ஆகும் என்று எண்ணி;  துன்னு
காதல்துரப்ப -
நிறைந்த விருப்பம் தூண்டுதலால்; வந்தவை - செய்து
வந்தவற்றை; சொல்லல் ஆம் வகை - சொல்லுவதற்கு உரிய வகைகள்;
எம் அனோர்க்கு - என்போன்றவர்களுக்கு; உன்னல் ஆவன அல்ல
என்னினும்
- கருதுவதற்கும் தக்கவை அல்லனஎன்றாலும்; உற்ற பெற்றி
உயர்த்துவாம்
- முடிந்த அளவு சொல்லுவோம்.

     இராமன் எல்லார்க்கும் நன்மகனாதலால் பொதுவாக ‘மைந்தன்’
என்றார். உன்னல் ஆவன அல்ல- இழிவு சிறப்பும்மை விகாரத்ததால்
தொக்கது. உணர்த்துவாம் - தன்மைப்பன்மைவினைமுற்று.            67

மங்கையர் செயல்  

கலிவிருத்தம்

1558.குஞ்சரம் அனையார் சிந்தை கொள் இளையார்,
பஞ்சினை அணிவார்; பால் வளை தெரிவார்;
அஞ்சனம் என, வாள் அம்புகள் அடையே.
நஞ்சினை இடுவார்; நாள்மலர் புனவார்.*

     குஞ்சரம் அனையார் - யானைபோலும் பெருமிதமுடைய ஆடவர்
களின்; சிந்தைகொள்இளையார் - மனத்தைக் கவர்கின்ற இளைய
மங்கையர்; பஞ்சினை அணிவார் -செம்பஞ்சுக் குழம்பைக் கால்களில்
பூசுவர்; பால்வளை தெரிவார் - பால்போலும்சங்குவளையல் களைத்
தேர்ந்தெடுத்துக் கைகயில் அணிவர்; அஞ்சனம் என - மை என்று பேர்
சொல்லிக்கொண்டு; வாள் அம்புகள் இடையே - வாளும் அம்பும் போன்ற
கொடிய கண்களில்;நஞ்சினை இடுவார் - விடத்தை இடுவர்; நாள்மலர்
புனைவார் -
புதிய மலர்களைத்தலையில் சூடுவர்.

    இளையார் என்பது மகளிரைக் குறித்தது. ‘இளையவர் தம்மொடுஅவர்
தரும் கல்வியே கருதி ஓடினேன்’என்னும் திருமங்கையாழ்வார் பெரிய
திருமொழியிலும் (1) இச்சொல் இப்பொருளில் வருதல்காணலாம். ‘பந்தினை
இளையவர் பயில் இடம்’ (79) என்னும் இடத்தும் இப்பொருட்டாதல்
கருதத்தக்கது. கண்ணில் இடும மையினை நஞ்சு எனக் கற்பனை செய்தல்த
(1564) பின்னும்காணலாம்.                                     68