பக்கம் எண் :

கைகேயி சூழ்வினைப் படலம் 161

  பொன் திணி மாட வீதி
     பொருக்கென நீங்கி, புக்கான்;
தன் திரு உள்ளத்துள்ளே
     தன்னையே நினையும் மற்று அக்
குன்று இவர் தோளினானைத்
     தொழுது, வாய் புதைத்து, கூறும்;

     ‘என்றனள்’ - ‘பிள்ளையைக் கொணர்க’ என்று கைகேயி சொன்னாள்;
என்னகேட்டான் - என்று கூறக் கேட்டான் சுமந்திரன்;  எழுந்த பேர்
உவகை பொங்க -
உண்டாகிய மிக்க மகிழ்ச்சி மேலும் மேலும் பெருக;
பொன் திணி மாட வீதி -பொன்மயமான மாடங்களையுடைய தெருக்களை;
பொருக்கென நீங்கி - விரைவாகக் கடந்து; புக்கான் - (இராமனது
மாளிகையினுள்) புகுந்தான்;  தன் திரு உள்ளத்துள்ளே -(அங்குத்) தனது
மனத்திற்குள்ளே; தன்னையே நினையும் அக்குன்று இவர் தோளினாளை-
தன்னையே நினைத்துக்கொண்டிருக்கின்ற அந்தக் குன்று போன்ற
புயங்களையுடைய இராமபிரானை; தொழுது வாய் புதைத்து - (கண்டு)
வணங்கி வாயை மூடிக்கொண்டு;  கூறும் - (பின்வருமாறு) சொல்லலானான்.

     இராமபிரான் தான் கொண்ட மானிட வேடத்திற்கு ஏற்றவாறு,
உண்ணாமல் நோன்புமேற்கொண்டு  நாராயணனைத் தியானித்து  நிற்றலின்
‘தன்னையே நினையும்’ என்றார். இராமனைவாழ்த்தித் தயரதனுடன் சேர்த்து
அனுப்பக் கருதியே கைகேயி  இராமனை அங்கேஅழைத்திருப்பதாகச்
சுமந்திரன் எண்ணியதால் எழுந்த பேருவகைபொங்குவதாயிற்று.        84

சுமந்திரன் இராமனை அழைத்தல்  

1575.‘கொற்றவர், முனிவர், மற்றும்
     குவலயத்து உள்ளார், உன்னைப்
பெற்றவன் தன்னைப் போலப்
     பெரும் பரிவு இயற்றி நின்றார்;
சிற்றவைதானும், “ஆங்கே கொணர்க”
     எனச் செப்பினாள்; அப்
பொன் - தட மகுடம் சூடப்
     போதுதி, விரைவின்’ என்றான்.

     ‘கொற்றவ - அரசர்களும்; முனிவர் - இருடிகளும்; மற்றும்
குவலயத்துஉள்ளார் -
பின்னும் இந்நிலவுலகத்தில்  உள்ள மக்களும்;
உன்னைப் பெற்றவன்தன்னைப் போல - உன்னைப் பெற்ற தயரதனைப்
போல;  பெரும் பரிவு இயற்றி நின்றார் -(உன்னிடம்) மிகுந்த அன்பைக்
காட்டி நின்றார்;  சிற்றவைதானும் - சிற்றன்னை