பக்கம் எண் :

162அயோத்தியா காண்டம்

யாகிய கைகேயியும்;  ஆங்கே கொணர்க எனச் செப்பினாள் - அவனிடம்
உன்னை அழைத்து வருமாறு சொன்னாள்; அப் பொன்தட மகுடம் சூட-
(ஆதலால்) அந்தப் பொன்னால் ஆகியபெரிய முடியை (நீ) சூடுவதற்கு;
விரைவின் போதி - விரைவாக வருவாய்;’  என்றான் -என்று சுமந்திரன்
சொன்னான்.

     கொணர்கென - தொகுத்தல் விகாரம்;  அகரம் தொக்கது.  அவை -
அவ்வை;  தாய்; இடைகுறைந்தது.                                85

இராமன் தேரில் ஏறிச் செல்லுதல்  

1576.ஐயனும், அச் சொல் கேளா,
     ஆயிர மெளிலியானைக்
கைதொழுது, அரச வெள்ளம்
     கடல் எனத் தொடர்ந்து சுற்ற,
தெய்வ கீதங்கள் பாட,
     தேவரும் மகிழ்ந்து வாழ்த்த,
தையலார் இரைத்து நோக்க,
     தார் அணி தேரில் சென்றான்.

     ஐயனும் - இராமபிரானும்; அச் சொல்கேளா - அந்தச் சொற்களைக்
கேட்டு;ஆயிரம் மௌலியானைக் கைதொழுது - ஆயிரம்
திருமுடிகளையுடைய திருமாலை வணங்கி;  அரசவெள்ளம் - அரசர்
கூட்டம்; கடல் எனத் தொடர்ந்து சுற்ற - கடல் போலப் பின்தொடர்ந்து
சூழவும்;  தெய்வ கீதங்கள் பாட - கடவுளைப் போற்றும் இசைகளை
இசைவாணர்கள் பாடிவரவும்;  தேவரும் மகிழ்ந்து வாழ்த்த - (வானில்
கூடிய) தேவர்களும்உவகைகொண்டு வாழ்த்தவும்;  தையலார் இரைத்து
நோக்க -
மகளிர் ஆரவாரித்துத் தன்னைவிரும்பிப் பார்க்கவும்; தார்
அணி தேரில் சென்றான் -
மாலைகளால் ஒப்பனைசெய்யப்பட்ட தேரில்
போனான்.

     இராமன் சுமந்திரன் சொற்கேட்டுத் தன் குலதெய்வமான
அரங்கநாதனைத் தொழுது தேரில் புறப்பட்டான். இரைத்தல் - மகிழ்ச்சியால்
ஆரவாரித்தல்.                                                86

மகளிர் செயல்கள்  

1577.திரு மணி மகுடம் சூடச் சேவகன்
     செல்கின்றான் என்று,
ஒருவரின் ஒருவர் முந்த,
     காதலோடு உவகை உந்த,
இரு கையும் இரைத்து மொய்த்தார்;
     இன் உயிர் யார்க்கும் ஒன்றாய்ப்