பக்கம் எண் :

கைகேயி சூழ்வினைப் படலம் 165

இருக்கின்றானே;’  என்று - என்று எண்ணி;  உள்ளம் தள்ளுற நடுங்கி
நைவார் -
மனம் தடுமாறுவதால்  உடல்  நடுங்கித் துன்புறுவாராகி;
‘செங்கணும் - சிவந்தகண்களும்;  கரிய கோல மேனியும் - கருநிறம்
வாய்ந்த அழகிய திருமேனியும்;  தேரும்ஆகி - தேருமாகப் பொருந்தி;
எங்கணும் தோன்றுகின்றான் - (இராமன்) எங்குப்பார்த்தாலும்  காட்சி
தருகின்றான்;  இராமன் எனைவரோ - இராமன் வடிவுடையோர் எத்தனை
பேரோ;’  என்பார் - என்று வியப்புடன் கூறுவார்.

     நமக்கு அருள் புரியாதவன் எப்படி உலகத்திற்கு அருள்புரிந்து
காப்பாற்றப் போகிறான் என்றுமனம் தடுமாறினார்கள் அவன்மீது காதல்
கொண்ட பெண்கள்.  காம மிகுதியால் பார்க்குமிடம்எங்கும் இராமனைக்
கண்டனர்.   இஃது  உருவெளித்தோற்றம்.                         90

முனிவர் முதலியோர் நினைப்பும் பேச்சும்  

1581. இனையராய் மகளிர் எல்லாம்
     இரைத்தனர், நிரைத்து மொய்த்தார்;
முனைவரும், நகர மூதூர்
     முதிஞரும் இளைஞர் தாமும்,
அனையவன் மேனி கண்டார்,
     அன்பினுக்கு எல்லை காணார்,
நினைவன மனத்தால், வாயால்
     நிகழ்த்தது, நிகழ்த்தலுற்றாம்;

     மகளிர் எல்லாம் - பெண்கள் எல்லாரும்;  இனையராய் - இத்
தன்மையினராய்; இரைத்தனர் ஆரவாரித்து;  நிரைத்து  மொய்த்தார் -
கூட்டமாகி(இராமபிரானை) நெருங்கினார்கள்;  முனைவரும் - பற்றற்ற
முனிவர்களும்;  நகர மூதூர்முதிஞரும் - அயோத்தி நகரமாகிய அந்தப்
பழைய ஊரில் வாழும் மூத்தவர்களும்;  இளைஞர்தாமும் - சிறியவர்களும்;
அனையவன் மேனி கண்டார் - இராமபிரானது திருமேனி அழகைக்
கண்டு; அன்பினுக்கு எல்லை காணார்- அவன் மீது கொண்ட அன்புக்கு
வரம்பு காணாமல்;  மனத்தால் நினைவன - மனத்தால்
நினைப்பனவற்றையும்;  வாயால்நிகழ்ந்தது - வாயால் கூறியதையும்;
நிகழ்த்தலுற்றாம் - சொல்லத்தொடங்குவோம்.

     இராமபிரான் சிறப்புகள் அனைவரையும்  ஈர்க்க வல்லவனவாதலின்,
பற்றற்ற முனிவர்களும்அவன் முடிசூட்டிக்கொள்வதைக் காண விருப்பம்
கொண்டு வந்தனர் என்பதாம்.  நிகழ்ந்தது -நிகழ்த்தியது; பிறவினை விகுதி
மறைந்துள்ளது.  இதனை அந்தர்ப்பாவிதணிச் என்பர் வடநூலார். கண்டார்,
காணார் - முற்றெச்சங்கள்.                                      91

1582.‘உய்ந்தது இவ் உலகம்’ என்பார்;
     ‘ஊழி காண்கிற்பாய்’ என்பார்;