பக்கம் எண் :

170அயோத்தியா காண்டம்

     வீரன் - வீரனாகிய இராமன்;  மின் பொருவு தேரின்மிசை -
மின்னலையொத்த தேரின்மீது ஏறிவரும்போது;  ஆ - பகவானது;  தன்
பொருவு இல் கன்று -
தனது ஒப்பற்ற கன்று;  தனி தாவி வரல்
கண்டாங்கு -
தனியே துள்ளிக் குதித்து வருதலைப்பார்த்தபோது; அன்பு
உருகு சிந்தையொடும் -
அன்பினால் கரைகின்ற மனத்தோடு;  உருகுமா
போல் -
உருகும் வகைபோல; என்பு உருகி - உடம்பு நெகிழ்ந்து; நெஞ்சு
உருகி -
மனம் உருகி (நிற்பதன்றி); உருககில்லார்யார் - உருகாமல்
வன்மையோடுநின்றவர் யார்? (எவரும் இலர்).

     இராமனைக் கண்ட எல்லாரும் தம்மையறியாமலே அவன்மீது அன்பு
தோன்றி  உள்ளமும் உடலும்உருகி நிற்பர் என்றவாறு.  கண்டாங்கு -
தொகுத்தல் விகாரம், அகரம் தொக்கது. உருகுமா போல்- உருகுமாறுபோர்ல;
ஆ - ஆறு என்பதன் விகாரம். பின்னிரண்டு அடிகளில் உருகுதல் என்ற
சொல் பலமுறை  ஒரே பொருளில் வந்தது  சொற்பொருட் பின்வருநிலை
அணி.                                                       98

1589.‘சத்திரம் நிழற்ற, நிமிர் தானையொடு நானா
அத்திரம் நிழற்ற, அருளொடு அவனி ஆள்வார்,
புத்திரர் இனிப் பெறுதல் புல்லிது’ என, நல்லோர்.
சித்திரம் எனத் தனி திகைத்து, உருகி, நிற்பார்.

     நல்லோர் - நற்பண்புடையவர்; சத்திரம் நிழற்ற -
வெண்கொற்றக்குடைநிழலைச் செய்யவும்; நிமிர் தானையொடு - பெருகிய
சேனையுடன்;  நானா அத்திரம்நிழற்ற - பல்வகைப் படைகளும்
ஒளிவீசவும்;  அருளோடு அவனி ஆள்வார் - அருளுடன்பூமியை
ஆளும் அரசர்கள்; இனி - இராமபிரான் பிறந்த பின்பு; புத்திரர் பெறுதல்
புல்லிது -
மைந்தர்களைப் பெறுவது சிறுமையுடையது;  என - என்று
சொல்லி;  திகைத்து - திகைத்தும்;  உருகி - மனம் உருகியும்; சித்திரம்
என நிற்பார் -
ஓவியம்போல் அசைவற்று நிற்பர்,

     இராமனைப் போன்ற பிள்ளையை இனி எவரும் பெறல் அரிது என்பது
கருத்து. அத்திரங்கள்எய்வன, எறிவன, குத்துவன, வெட்டுவன எனப் பல
வகைப்படுதலால் ‘நானா அத்திரம்’ என்றார்.நிழல் - சாயை, ஒளி என்னும்
இருபொருள் தருவது.                                           99

1590.‘கார் மினொடு உலாயது என
     நூல் கஞலும் மார்பன்,
தேர்மிசை, நம் வாயில் கடிது
     ஏகுதல் செய்வானோ?
கூர் கனக ராசியொடு
     கோடி மணியாலும்
தூர்மின், நெடு வீதியினை’
     என்று சொரிவாரும்.