பாவமும் அருந் துயரும்- இவன் ஆளப்போவதால் தீ வினைகளும் தீர்த்தற்கரியதுன்பங்களும்; வேர் பறியும் என்பார் - அடியோடு அழியும் என்பார்; பூவலயம் -இந்தப் பூமண்டலம்; இன்று தனி அன்று - இப்பொழுது இராமன் ஒருவனுக்கே தனியுரிமை உடையதுஅன்று; பொது என்பார் - எல்லார்க்கும் பொதுவுடைமை ஆகும் என்பார்; தேவர் பகை உள்ளன - தேவர்களுக்குப் பகையாய் உள்ள அரக்கர் கூட்டங்களை; இவ் வள்ளல் தெரும் என்பார் - இவ் இராமன் அழிப்பான் என்பார்; ஏவல் செயும் மன்னர் - இவனுக்குஏவல் செய்யும் அரசர்களது; தவம் யாவது கொல் என்பார் - நல்வினை எத்தன்மையதோஎன்பார். இராமன் ஆட்சியில் தம் பாவமும் துயரும் தீரும் என்றார் சிலர். இராமன் மக்கள்குறைகளைக் கேட்டறிந்து, அவர்கள் தாமே ஆட்சிபுரிந்தால் எவ்வாறு நன்மையைப் பெறலாமோஅவ்வாறு நன்மையைப் பெறச்செய்வான் என்னும் உறுதிப்பாட்டால் ‘பூவலயம் இன்று தனி அன்று; பொது’ என்றார் சிலர். இராமன் ஆளும்போது தாங்களே ஆளுவதாகக் கருதினர் என்பதாம். 102 1593. | ஆண்டு, இனையராய் இனைய கூற, அடல் வீரன், தூண்டு புரவிப் பொரு இல் சுந்தர மணித் தேர், நீண்ட கொடி மாட நிரை வீதி நிறையப் போய், பூண்ட புகழ் மன்னன் உறை கோயில் புகலோடும் - |
ஆண்டு - (நகரமக்கள் வீதியாகிய) அவ்விடத்து; இனையராய் - இத்தன்மையராகி; இனைய கூற - இத்தன்மையனவற்றைச் சொல்லிக்கொண்டிருக்க; அடல்வீரன் - வெற்றி வீரனாகிய இராமபிரான்; தூண்டு புரவி - (சுமந்திரனால்)செலுத்தப்பட்ட குதிரைகள் பூட்டப்பட்ட; பொரு இல் சுந்தர மணித் தேர் - ஒப்பற்றஅழகிய மணிகள் கட்டிய தேரில்; நீண்ட கொடி மாட நிரை வீதி - உயர்ந்தகொடிகளையுடைய மாளிகை வரிசையினையுடைய தெரு; நிறையப் போய் - நிறைவாக விளங்கும்படிசென்று; புகழ்பூண்ட மன்னன் உறை கோயில் - புகழை ஆபரணமாக அணிந்துள்ள தயரதன்தங்குகின்ற அரண்மனையை; புகலோடும் - அடைந்த அளவில். இனையர், இனைய - குறிப்பு வினையாலனையும் பெயர். புகலோடும் -உம்மீற்று வினையெச்சம். 103 அரண்மனையில் இராமன் அரசனைக் காணாமை 1594. | ஆங்க வந்து அடைந்த அண்ணல், ஆசையின் கவரி வீச, பூங் குழல் மகளிர் உள்ளம் புதுக் களி ஆட, நோக்கி, |
|