பக்கம் எண் :

176அயோத்தியா காண்டம்

கூற்றம் அன்ன கைகேயி கூற்று  

1599.நின்றவன்தன்னை நோக்கி,
     இரும்பினால் இயன்ற நெஞ்சின்
கொன்று உழல் கூற்றம் என்னும்
     பெயர்இன்றிக் கொடுமை பூண்டாள்,
‘இன்று எனக்கு உணர்த்தல் ஆவது
     ஏயதே என்னின், ஆகும்:
ஒன்று உனக்கு உந்தை, மைந்த!
     உரைப்பது ஒர் உரை உண்டு’ என்றாள்.

     இரும்பினால் இயன்ற நெஞ்சின்- இரும்பினால் ஆகிய மனத்தோடு;
கொன்று உழல்கூற்றம் என்னும் பெயர் இன்றி - உயிர்களைக் கொன்று
திரியும் எமன் என்னும்பெயர்மட்டும் இல்லாமல்; கொடுமை பூண்டாள் -
அவனுடைய கொடுந்தன்மையைமேற்கொண்டவளாகிய கைகேயி; ‘மைந்த -
மகனே;  உந்தை உனக்கு உரைப்பது -உன் தந்தை உனக்குச்
சொல்வதாகிய;  ஓர் உரை ஒன்று உண்டு - சொல் ஒன்று உள்ளது;
இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயது என்னில் - இப்பொழுது
எனக்கு (உன்னிடம் அதைச்)சொல்வது  பொருத்தமானது என்று நீ
கருதினால்; ஆகும் என்றாள் - நான் அதனைத்தெரிவிக்கலாம் என்றாள்.

     கைகேயி தான் சொல்லப்போவது இன்னாத சொல்லாதலின் அதனை
விரையக் கூறாது, இராமனுடையஇசைவு பெற்றுத் தெரிவிக்க எண்ணி
நயமாகப் பேசுகிறாள். இது கைகேயியின் வஞ்சக மனத்தைக்காட்டுகிறது. 109

இராமனின் பணிவுரை  

1600.‘எந்தையே ஏவ, நீரே
     உரைசெய இயைவது உண்டேல்,
உய்ந்தனென் அடியேன்; என்னின்
     பிறந்தவர் உளரோ? வாழி!
வந்தது, என் தவத்தின் ஆய
     வரு பயன்; மற்று ஒன்று உண்டோ?
தந்தையும், தாயும், நீரே;
     தலைநின்றேன்; பணிமின்’ என்றான்.

     ‘எந்தையே ஏவ - என் தந்தையாரே கட்டளைவிட; நீரே உரை
செய இயைவது உண்டேல்-
(அதனை) நீரே தெரிவிக்க இசைவதானால்;
அடியேன் உய்ந்தனென் - நான்ஈடேறிவிட்டேன்; என்னின் பிறந்தவர்
உளரோ -
என்னைச் காட்டிலும் (மேன்மைஅடையும்படி) பிறந்தவர்
வேறொருவர் இருக்கின்றாரோ? (இல்லை);  என் தவத்தின்