பக்கம் எண் :

178அயோத்தியா காண்டம்

என்னாது அரசன் கூறினான் என்பதால் அரசு ஆணை இது மீறுதற்கு அரிது
என்பதைச் சுட்டினாள்.                                         111

இராமனது  தோற்றப் பொலிவு  

1602.இப் பொழுது, எம்ம னோரால்
     இயம்புதற்கு எளிதே? - யாரும்
செப்ப அருங் குணத்து இராமன்
     திருமுகச் செவ்வி நோக்கின்;
ஒப்பதே முன்பு பின்பு;
     அவ் வாசகம் உணரக் கேட்ட
அப் பொழுது அலர்ந்த செந்தா
     மரையினை வென்றது அம்மா!

     யாரும் செப்ப அருங் குணத்து  இராமன் - எவராலும்
சொல்லுதற்கரியநற்பண்புகளையுடைய இராமபிரானது;  திருமுகச் செவ்லி
நோக்கின் -
திருமுகத்தின் அழகைப்பார்த்தால்; எம்மனோரால்
இயம்புதற்கு எளிதே -
(அது) எம்மைப் போன்றவர்களால்சொல்லுவதற்கு
எளிதோ? (அன்று); முன்பு பின்பு ஒப்பதே - கைகேயி சொன்னவற்றைக்
கேட்பதற்கு முன்பும் அவற்றைக் கேட்டதற்குப் பின்பும் செந்தாமரையைப்
போன்றிருந்தது; அவ்வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது - அந்தச்
சொற்களைத் தெரியும்படி கேட்ட அந்தச்சொற்களைத் தெரியும்படி கேட்ட
அந்தச் சமயத்தில்; அலர்ந்த செந்தாமரையினை -மலர்ந்த செந்தாமரை
மலரினை;  வென்றது - வென்றுவிட்டது.

     கைகேயியின் கொடி சொற்கள் இராமனைத் துன்புறுத்தாமல்
இன்புறுத்தியதால் அப்பொழுது அவன்முகம் தாமரையின் அழகை வென்றது
என்பதாம்.  எளிதே - ஏகாரம் எதிர்மறை.  அம்மா - வியப்புஇடைச்சொல்.
இதனோடு, “மெய்த் திருப்பதம் மேவு”  என்ற போதினம்  “இத் திருக்
துறத்துஏகு”  என்ற போதினும்,  சித்திரத்தின் அலர்ந்த  செந்தாமரை,
ஒத்திருக்கும்  முகத்தினைஉன்னுவாள்”  (5088)  என்னும் சுந்தர காண்டப்
பாடல் ஒப்பு நோக்கத்தக்கது.                                 112

1603. தெருளுடை மனத்து மன்ன
     ஏவலின் திறம்ப அஞ்சி,
இருளுடை உலகம் தாங்கும்
     இன்னலுக்கு இயைந்து நின்றான்,
உருளுடைச் சகடம் பூண்ட,
     உடையவன் உய்த்த கார் ஏறு
அருளுடை ஒருவன் நீக்க
     அப் பிணி அவிழ்ந்தது ஒத்தான்.