பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 187

 பெய் வளைத் தளிரால் பிசையும்; புகை
வெய்து உயிர்க்கும்; விழுங்கும், புழுங்குமால்.

     (கோசலை),  கையைக் கையின் நெரிக்கும் - கையை மற்றொரு
கையால் நெரிப்பாள்;தன்காதலன் வைகும் - தன் மகளாகிய இராமன்
தங்கிய;  ஆல் இலை அன்ன வயிற்றினைப்பெய் வளைத்தளிரால்
பிசையும் -
ஆல் இலை போன்ற தன் வயிற்றைத் தனது வளையல்
அணிந்ததளிர் போன்ற கைகளால் விசைவாள்;  புகை வெய்து
உயிர்க்கும் -
உள் நெருப்பால்புகையோடு கூடிய வெப்ப மூச்சு விடுவாள்;
விழுங்கும் - அவ் உயிர்ப்பை அடக்குவாள்;  புழுங்கும் - வெம்பிப்
போவாள்.

     கோசலையின் துயரத் துடிப்பின் மெய்ப்பாடுகள் இங்கு அடுக்கியுள்ளன.
‘ஆல்’ஈற்றசை.                                               10

1616.‘நன்று மன்னன் கருணை’ எனா நகும்;
நின்ற மைந்தனை நோக்கி, ‘நெடுஞ் சுரத்து
என்று போவது? எனா எழும்; இன் உயிர்
பொன்றும் போது உற்றது உற்றனள் போலுமே.

     ‘மன்னன் கருணை நன்று’ எனா நகும் - ‘சக்கரவர்த்தி உன்பால்
காட்டிய இரக்கம்மிக நன்றாய் இருந்தது’ என்று சிரிப்பாள்; நின்ற
மைந்தனை நோக்கி -
தன் எதிரேநின்ற இராமனைப் பார்த்து; ‘நெடுஞ்
சுரத்துப் போவது என்று’  எனா  எழும் -
நீண்டகாட்டு வழியில்
போவது எப்போது என்று சொல்லி எழுந்திருப்பாள்;  இன் உயிர்
பொன்றும்போது  உற்றது -
இனிய உயிர் போகும்போது அடைகின்ற
மரண வேதனையை;  உற்றனள் போலும் - தற்போது அடைந்தாள் போல
ஆனாள்.

     தானும் உடன் செல்வாள்போல எழுவாளாயினள் என்க. சாவுத்துயர்
அடைந்தாள் என்பதாம். ‘ஏ’ஈற்றசை.                              11

1617.‘அன்பு இழைத்த மனத்து அரசற்கு, நீ
என் பிழைத்தனை?’ என்று, நின்று ஏங்குமால் -
முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர்,
பொன் பிழைக்கப் புலம்பினர் போலவே.

     ‘அன்பு இழைத்த மனத்து அரசற்கு - உன்னிடத்துப் பேரன்பு
செய்துவந்து மனத்தை உடையதயரத சக்கரவர்த்திக்கு; நீ என்
பிழைத்தனை’ -
நீ என்ன தவறு செய்தாய்;’ என்றுநின்று - என்று
சொல்லிக் கொண்டு; முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர் -
முற்பிறவியிற்