பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 189

டிர்க்கு அரிய கற்பினை உடையவளே; மெய்த்திறத்துத நம் வேந்தனை-
உண்மைக் கூற்றில்ஒரு சிறிதும் பிறழாத நம் சக்கரவர்த்தியை;  நீ பொய்த்
திறத்தினன் ஆக்குதியோ? புகல்’ -
சொன்ன சொல்லை மாற்றிக்
கொள்ளும் பொய்த்தன்மை  உடையவனாக நீசெய்துவிடுவாயோ, 
சொல்வாயாக;  என்றான் -.

     சொன்னதைச் சொன்னவாறே நிறைவேற்றல் சத்தியமாம். ‘வனம்போகு’
என்ற பின்னர் வனம்போகாமல் இருந்தால் அரசன் சத்தியம் பாழாகும்
என்பதைத் தாய்க்கு நினைவுறுத்தி,  நாயகனைச்சத்தியத்தில் காப்பது
நாயகியின் கற்புநலம் என்பதைக் குறிப்பால் புலப்படுத்தி‘அருங்கற்பினோய்’
என்று தாயை விளித்தானாம்.                                     14

1620.பொற்புறுத்தன, மெய்ம்மை பொதிந்தன,
சொற்புறுத்தற்கு உரியன, சொல்லினான் -
கற்பு உறுத்திய கற்பு உடையாள்தனை
வற்புறுத்தி, மனம் கொளத் தேற்றுவான்.

     கற்பு உறுத்திய கற்பு உடையாள்தனை - கற்பு என்பது  இப்படிப்
பட்டது என்பதைஉலகிற்கு உணர்த்தி நிறுத்திய பெருங் கற்பினை உடைய
கோசலையை;  வற்புறுத்தி -
மனஉறுதிப்படுத்தி; மனம் கொள -
மனத்தில் படும்படி;  தேற்றுவான் - தெளியப்பண்ண வேண்டி; பொற்ப
உறுத்தன -
அழகு பொருந்தியனவும்; மெய்ம்மை பொதிந்தன -உண்மை
நிரம்பியனவும்; சொற்புறுத்தற்கு உரியன - தாய்க்கு மகன் சொல்லுதற்குத்
தகுந்தனவுமாகிய சொற்களைச்; சொல்லினான் - சொன்னான்.

     கல்லின் தன்மை போல உறுதிப்பாடுடைய கற்பு என உரைப்பினும்
அமையும்.  கற்பின் தன்மை உலகம் அறிய உணர்த்திய கற்பு என்பதைச்
‘சீலம் இன்னது  என்று அருந்ததிக்கு அருளிய திருவேஎன்று  (2061.)
இராமன் சீதையை அழைப்பது கொண்டும் அறிக.                    15

1621.‘சிறந்த தம்பி திரு உற, எந்தையை
 மறுந்தும் பொய் இலன் ஆக்கி, வனத்திடை
உறைந்து தீரும் உறுதி பெற்றேன்; இதின்,
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ?

     ‘சிறந்த தம்பி திரு உற - (என்னிலும்) சிறந்த தம்பியாகிய பரதன்
அரசச்செல்வம் பெற; எந்தையை - என் தந்தையாகிய தயரதனை;
மறந்தும் பொய் இலன்ஆக்கி - மறப்பினாலும் பொய் சொல்லாத சத்திய
வாக்கினனாகச் செய்து;  வனத்திடை -காட்டில்; உறைந்து தீரும் உறுதி
பெற்றேன் -
வசித்துத் திரும்பி வருகின்ற நன்மையைஅடைந்தேன்;
இதின் - இதைக்காட்டிலும்; யான் பிறந்து