பக்கம் எண் :

190அயோத்தியா காண்டம்

பெறும் பேறு என்பது யாவதோ?’ - யான் பிறவி எடுத்துப் பெறுகின்ற
பாக்கியம் என்பது வேறு என்ன இருக்கிறது; (இல்லை).

     ‘பங்கம் இல் குணத்து  எம்பி’ என்றது (1608.) போல இங்கும் ‘சிறந்த
தம்பி’  என்றதுகாண்க.  ‘யாவதோ’ ஓகாரம் வினாப் பொருளில் வந்தது.
இனி, யாவது  என்பதே வினாவாதலின்,‘ஓ’ காரம் எதிர்மறை குறித்தது 
எனினும் ஆம்.                                                16

1622.‘விண்ணும் மண்ணும், இவ் வேலையும், மற்றும் வேறு
எண்ணும் பூதம் எலாம் அழிந்து ஏகினும்,
அண்ணல் ஏவல் மறுக்க, அடியனேற்கு
ஒண்ணுமோ? இதற்கு உள் அழியேல்’ என்றான்.

     ‘விண்ணும் - ஆகாயமும்;  மண்ணும் - பூமியும்; இவ்வேலையும் -
இந்தக் கடல்களும்; மற்றும் வேறு எண்ணும் பூதம் எலாம்- வேறாகிய தீ,
காற்று முதலாகிய மூலப்பொருள்களும்; அழிந்து ஏகினும் - மாறுபட்டுக்
கெட்டுப் போனாலும்;  அண்ணல் - தயரதனது;  ஏவல் - கட்டளையை;
மறுக்க - மறுப்பதற்கு;  அடியனேற்கு  ஒண்ணுமோ - அடியேனுக்குத்
தகுமோ; இதற்கு  -;  உன் அழியேல்’ -(நீ) மனம்  வருந்தாதே;’
என்றான் -.

     ‘ஏகினும்’ என்பது அவை நிலை கெடாமை  உணர்த்தி நின்றது -
தயரதன் கட்டளையை அவ்வாறேநிறைவேற்றுதலே தனக்குத் தகுதி
என்றான் இராமன்.                                             17

கோசலை வேண்டுகோள்  

1623.‘ஆகின், ஐய! அரசன்தன் ஆணையால்
ஏகல் என்பது யானும் உரைக்கிலென்;
சாகலா உயிர் தாங்க வல்லேனையும்,
போகின் நின்னொடும் கொண்டனை போகு’ என்றான்.

     ‘ஐய! - இராமனே!; ஆகின் - அப்படியானால்;  அரசன்தன்
ஆணையால் -
அரசன் இட்ட கட்டளை என்பதால்;  யானும் ஏகல்
என்பது  உரைக்கிலென் -
நானும் நீ வனம் போகாதே என்பதைச்
சொல்லவில்லை;  போகின் - (நீ) வனம் போவதாயின்; சாகலா உயிர்
தாங்க வல்லேனையும் -
சாகாத இவ்வியிரத் தூக்கமாட்டால்
சுமக்கின்றவளாகிய என்னையும்; நின்னொடும் கொண்டனை போகு’ -
உன்னோடு அழைத்துக்கொண்டு போவாயாக;’ என்றான் -.

     ‘அரசன் கட்டளையைக் குடிமகன் மறுத்தல் கூடாது; ஆகையால்,
அதை நான் மறுக்கவில்லை,உன்னைப் பிரிந்து உயிரைச் சுமந்து என்னால்
வாழ முடியாது; உயிர்போகவும் போகாது; ஆகையால்உன்னோடு
என்னையும் காட்டிற்கு அழைத்துச் செல்’ என்றாள் கோசலை. ‘பரதன்
அரசளாளுதல்,இராமன்