1626. | ‘சித்தம் நீ திகைக்கின்றது என்? தேவரும் ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே? எத்தனைக்கு உள ஆண்டுகள்? ஈண்டு, அவை பத்தும் நாலும் பகல் அலவோ?’ என்றான். |
‘நீ சித்தம் திகைக்கின்றது என்? - தாயே, நீ மனம் தடுமாறுவது எதனால்; தேவரும் - தேவரும்; ஒத்த - தம் நிலைக்குப் பொருந்திய; மாதவம் செய்து -சிறந்த தவத்தைச் செய்து; உணர்ந்தார் அன்றே? - தம் நிலைக்கு மேலாகஉயர்ந்தார்கள் அல்லவா; ஆண்டுகள் எத்தனைக்கு உள - (நான் பிரிந்து செல்கிற)ஆண்டுகள் எவ்வளவு உள்ளன; அவை பத்தும் நாலும் பகல் அல்லவோ? - அந்தப் பதினான்குஆண்டுகளும், பதினான்கு நாள்கள் அல்லவா? (இதற்கு வருந்துவானேன்.) ‘நான் காட்டிற் சென்று தவம் புரிந்து மேன்மை அடைய அல்லவா போகிறேன்! இதற்கு நீமனம் தடுமாறலாமா’ என்று தாயைத் தேற்றினான். ஆண்டுகளை நாள்கள் என்று குறுக்கியது தேறுதல்வார்த்தை யாகும். “எண்ணிய சில நாளில் குறுகுதும்’ என்று பின் (1984) குகனிடமும் இவ்வாறு கூறுல் காண்க. 21 1627. | ‘முன்னர், கோசிகன் என்னும் முனிவரன் - தன் அருள்தலை தாங்கிய விஞ்சையும், பின்னர் எய்திய பேறும் பிழைத்தவோ? இன்னம் நன்று அவர் ஏயின செய்தலே. |
‘முன்னர் - தந்தையார் விசுவாமித்திர முனிவனிடம் வேள்விகாக்க அனுப்பிக்கையடை கொடுத்த போது; கோசிகன் என்னும் முனிவரன் - விசுவாமித்திரனாகிய கௌகிசமுனிவனது; அருள்தலை - கருணையினால்; தாங்கிய - (நாங்கள்) பெற்ற; விஞ்சையும் - மந்திர வித்தைகளும்; பின்னர் எய்திய பேறும் - பிறகு அடைந்ததிருமணப் பேறும்; பிழைத்தவோ? - தவறியவோ; அவர் ஏறிய செய்தல் - வனம்சென்று அத்தகைய முனிவர்கள் ஏவிய காரியங்களைச் செய்து முடித்தல்; இன்னம் நன்று -இன்னமும் நல்லதையே தரும். விசுவாமித்திரனால் கிடைத்த விஞ்சை பலை, அதிபலை என்ற இரண்டு மந்திரங்கள். பின்புஎய்திய பேறு சீதா கல்யாணம், அடுத்துப் பரசுராமனது ஆற்றலை ஒடுக்கியதையும் சொல்லலாம்.மேலும், முனிவர்களுக்குத் தொண்டு செய்து வனத்தில் தங்குவதால் நலமே விளையும் என்றான்இராமன். ‘ஏ’ காரம் ஈற்றசை. 22 1628. | ‘மா தவர்க்கு வழிபாடு இழைத்து, அரும் போதம் முற்றி, பொரு அரு விஞ்சைகள் ஏதம் அற்றன தாங்கி, இமையவர் காதல் பெற்று, இந் நகர் வரக் காண்டியால், |
|