பக்கம் எண் :

மந்திரப் படலம் 21

மனம் கலங்கி ;  இரண்டு கன்றினுக்கு - இரு கன்றுக்குட்டிகளுக்காக ;
இரங்கம் ஓர் ஆ என - மனம் இரங்கும் ஒரு பசுவைப்போல ;
இருந்தார் - (ஒன்றும் தெளிய மாட்டாதவராக) இருந்தனர்.

     இரு கன்றுகளை உடைய பசு இரண்டில் ஒன்றை விடும் நிலை
வந்தபோது எதையும்பிரிய மனம் ஒருப்படாமல் இரண்டுக்கும்
இரங்குவதுபோல, தயரதன் துறத்தலையும், இராமன்அரசனாகாமல்
இருத்தலையும் விரும்பாமல் இருவரையும் விட மனமின்றி இரங்கினர்
என்பது உவமையாற்போந்த பொருளாகும். விம்முறல் - துன்பமுறுதல் ;
இரங்குதல்.                                               31

1345.அன்னர் ஆயினும், அரசனுக்கு, அது அலது உறுதி
பின்னர் இல் எனக் கருதியும், பெரு நில வரைப்பில்
மன்னும் மன்னுயிர்க்கு இராமனின் மன்னவர் இல்லை
என்ன உன்னியும், விதியது வலியினும், இசைந்தார்.

     அன்னர் ஆயினும் - (மந்திரக் கிழவர்) அத்தன்மையராயினும் ;
அரசனுக்கு - தயரதனுக்கு ;  அது அலது உறுதி பின்னர் இல் எனக்
கருதியும்
-அவ்வாறு செய்வதன்றி நன்மை வேறில்லை என்று எண்ணியும்;
பெரு நில வரைப்பில் - பெரிய நிலவுலகத்தில்; மன்னும் மன்னுயிர்க்கு-
தங்கியிருக்கின்றநிலைபேறுடைய உயிர்களுக்கு ;  இராமனின் மன்னவர்
இல்லை
- இராமனைப் போலச்சிறந்த அரசர் இல்லை ;  என்ன
உன்னியும்
- என்று நினைத்தும் ;  விதியது வலியினும் - விதியின்
வலிமையாலும்; இயைந்தார் - (அரசன் கருத்துக்கு)உடன்பட்டனர்.

     தயரதன் விருப்பத்தினை அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டதற்கு மூன்று
காரணங்கள் இருந்தன. அவை :  துறவு தயரதனுக்கு நன்மை தரும் என்று
எண்ணியமை, இராமனைப்போன்ற சிறந்த அரசர் இல்லை என்று
நினைத்தமை, இராமன் காடு செல்வதற்குரிய விதியின் வலிமைஎன்பன.  32

வசிட்டன் பேச்சு

1346.இருந்த மந்திரக் கிழவர்தம்
     எண்ணமும், மகன்பால்
பரிந்த சிந்தை அம் மன்னவன்
     கருதிய பயனும்,
பொருந்து மன்னுயிர்க்கு உறுதியும்,
     பொதுவுற நோக்கி,
தெரிந்து, நான்மறைத் திசைமுகன்
     திருமகன் செப்பும் :

     நான்முறைத் திசைமுகன் திருமகன் - நான்கு வேதங்களையுடைய
நான்முகனுக்கு மகனாகிய வசிட்டன் ;  இருந்த மந்திரக் கிழவர்தம்