பக்கம் எண் :

24அயோத்தியா காண்டம்

     ‘உரவோய் ! - வலிமை உடையோய் ; பொன் உயிர்த்த பூ
மடந்தையும்
- அழகினைத் தோற்றுவிக்கும் சீதேவியும் ;  புவி எனும்
திருவும் - மண்மடந்தையும் ;  இன் உயிர்த் துணை இவன் என
நினைக்கின்ற இராமன்
- (தமக்கு)இனிய உயிர் போன்ற துணைவன்
இவனே என்று கருதுகின்ற இராமன் ;  தன் உயிர்க்கு(நல்லன்) என்கை
புல்லிது
- தன் உயிர்க்கு இனியான் என்று சொல்லுவது புன்மையானது ;
தன் பயந்து எடுத்த - தன்னைப் பெற்றெடுத்த ;  உன் உயிர்க்கு என -
உன்உயிர்க்கு எவ்வாறு நல்லனாக இருக்கிறானோ அவ்வாறே ;  மன்
உயிர்க்கு எலாம்
-நிலைபெற்ற எல்லா உயிர்களுக்கும் ;  நல்லன் -
நல்லவனாய் இருக்கிறான்.’

    இப்பாட்டு, இராமன் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்
என்பதனைக்கூறுகிறது. உயிர்த்துணைவன் உவமத்தொகை.             37

1351.வாரம் என் இனிப் பகர்வது?
     வைகலும், அனையான்
பேரினால், வரும் இடையூறு
     பெயர்கின்ற பயத்தால்,
வீர, நின் குல மைந்தனை,
     வேதியர் முதலோர்
யாரும், “யாம் செய்த நல் அறப் பயன்”
     என, இருப்பார்.

     ‘வீர ! - வீரனே ;  வைகலும் அனையான் பேரினால் -நாள்
தோறும் அந்த இராமன் திருநாமத்தைச் சொல்லுவதால் ;  வரும் இடர்
எலாம்
- ஒருவர்க்கு உண்டாகின்ற துன்பங்கள் எல்லாம் ;  பெயர்கின்ற
பயத்தால்
-விலகிப் போகின்ற தன்மையால் ;  நின் குல மைந்தனை -
உன் சிறந்த மகனாகியஇராமனை ;  வேதியர் முதலோர் யாரும் -
வேதம் ஓதும் அந்தணர் முதலியோர்எல்லாரும் ; யாம் செய்த நல் அறப்
பயன் என
- நாம் செய்த புண்ணியத்தின்விளைவு என்று ;  இருப்பார் -
நினைத்திருக்கிறார்கள் ;  வாரம் என்இனிப் பகர்வது - (என்றால்)
குடிமக்களுக்கு அவன்மீது உள்ள அன்பைப் பற்றி என்ன கூறுவது?

     ‘பேரினால், வரும் இடையூறு பெயர்கின்ற பயத்தால்’ என்பதால்
இராமனைக்காட்டிலும் இராம நாமம் ஆற்றல் மிக்கது என்பது
குறிக்கப்பட்டது.

     “இராம !”  என எல்லாம், மாறும், அதின் மாறு பிறிது இல்” என
வலித்தான் (4828) என்று பின்னும் குறிக்கப்படுதல் காணலாம். பயம் -
தன்மை.                                                     38