பக்கம் எண் :

மந்திரப் படலம் 27

 முனிவன் மா மலர்ப் பாதங்கள்
     முறைமையின் இறைஞ்சி,
‘இனிய சொல்லினை ; எம்பெருமான்
     அருள் அன்றோ,
தனியன் நானிலம் தாங்கியது?
     அவற்கு இது தகாதோ?

    அனையது ஆகிய உவகையன் - அத்தன்மைத்தாகிய மகிழ்ச்சி
யடைந்த தயரதன் ;  கண்கள் நீர் அரும்ப - அம் மகிழ்ச்சிக்குப் போக்கு
வீடாகக்கண்களில் நீர் துளிர்க்க ;  முனிவன் மாமலர்ப் பாதங்கள் -
வசிட்ட முனிவனுடையசிறந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை ;
முறைமையின் இறைஞ்சி -வணங்குதற்குரிய முறைப்படி வணங்கி ;
‘இனிய சொல்லினை - செவிக்கும்சிந்தைக்கும் இனிய கருத்தினைத்
தெரிவித்தாய் ;  தனியன் நானிலம் தாங்கியது - தனியொருவனாக யான்
மண்ணுலகினைப் போற்றிக் காத்தது; எம்பெருமான் அருள்அன்றோ -
என் இறைவனாகிய நினது அருளால் அல்லவா? அவற்கு இது தகாதோ-
அந்தஇராமனுக்கு இவ்வாறு அரசுபுரிதல் தகுதியுடையதாகாதோ?
(ஆகும்).’                                                    42

1356. ‘எந்தை ! நீ உவந்து இதம் சொல,
     எம் குலத்து அரசர்,
அந்தம் இல் அரும் பெரும் புகழ்
     அவனியில் நிறுவி,
முந்து வேள்வியும் முடித்து, தம்
     இரு வினை முடித்தார் ; 
வந்தது, அவ் அருள் எனக்கும்’ என்று
     உரைசெய்து மகிழ்ந்தான்.

    ‘எந்தை - என் தந்தை போன்றவனே ; நீ உவந்து இதம்சொல -
நீ விரும்பி நன்மையானவற்றை எடுத்துக் கூற ; எம் குலத்து அரசர் -
எம்முடைய சூரிய குலத்தில் தோன்றிய மன்னர்கள் ; அந்தம் இல் அரும்
பெரும் புகழ்
- அழிவு இல்லாத அரியதும் மிக்கதுமாகிய புகழினை ; 
அவனியில் நிறுவி -உலகில் நிலைபெறச் செய்து ;  முந்து வேள்வியும்
முடித்து
- சிறந்த யாகங்களையும்நிறைவேற்றி ;  தம் இருவினை
முடித்தார்
- தம் நல்வினை தீவினையாகிய இருவினைகளையும் வென்றார்;
அவ் அருள் எனக்கும் வந்தது - அந்த அருட்பேறு எனக்கும்
கிடைத்தது ;’  என்று உரை செய்து மகிழ்ந்தான் - என்று சொல்லி
இன்புற்றான்.                                                43