பக்கம் எண் :

மந்திரப் படலம் 29

1359. ‘புரைசை மாக் கரி நிருபர்க்கும்,
     புரத்து உறைவோர்க்கும்,
உரைசெய் மந்திரக் கிழவர்க்கும்,
     முனிவர்க்கும், உள்ளம்
முரைசம் ஆர்ப்ப, நின் முதல் மணிப்
     புதல்வனை, முறையால்
அரைசன் ஆக்கி, பின்
     அப் புறத்து அடுத்தது புரிவாய் !’

     புரைசை மாக் கரி நிருபர்க்கும் - கழுத்தில் இடப்படும்
கயிற்றையுடைய பெரிய யானைப் படையையுடைய அரசர்களுக்கும்; புரத்து
உறைவோர்க்கும்
- அயோத்தி நகரத்தில் வாழ்பவர்களுக்கும்; உரை செய்
மந்திரக் கிழவர்க்கும்
- தம் கருத்தை எடுத்துரைத்த அமைச்சர்களுக்கும்;
முனிவர்க்கும் -வசிட்டன் தொடக்கமான முனிவர்களுக்கும் ; உள்ளம்
முரைசம் ஆர்ப்ப - மனம் மகிழ்ச்சியால்முரசடிக்க (ஒலிக்க) ;  நின் முதல்
மணிப் புதல்வனை - நினக்கு
முதல் மகனும்நீலமணி போலும்
நிறத்தையுடையவனுமான இராமனை ;  முறையால் - செய்ய வேண்டிய
முறையோடு ;  அரசன் ஆக்கி - அரசனாக முடிசூட்டி; பின் அப் புறத்து
அடுத்தது
- பிறகு உனக்குத் தக்கதான துறவு மேற்கொள்ளுதலை ;
புரிவாய் -செய்வாய்.

     புரைசை, முரைசு, அரைசு - இடைப் போலிகள். முதல் புதல்வன்,
மணிப்புதல்வன் எனத் தனித்தனிக் கூட்டுக. தயரதன் துறவு மேற்கொள்வது
தனக்கு வருத்தம் தருவதாயினும்அறம் கருதி அதுவும் செய்ய
வேண்டுவதாய் இருத்தலால் நேரே சொல்லாமல் ‘அப்புறத்து அடுத்தது
புரிவாய்’ என்கிறான்.                                          46

ராமனை அழைத்துவரச் சுமந்திரன் செல்லுதல்  

1360.என்ற வாசகம், சுமந்திரன் இயம்பலும், இறைவன்,
‘நன்று சொல்லினை ; நம்பியை நளி முடி சூட்டி-
நின்று, நின்றது செய்வது ; விரைவினில், நீயே
சென்று, கொண்டு அணை, திருமகள் கொழுநனை’
                                    என்றான்.

     என்ற வாசகம் - இவ்வாறான சொற்களை; சுமந்திரன்இயம்பலும்-
சுமந்திரன் மென்மையாகத் தெரிவித்தவுடன் ;  இறைவன் - அரசனாகிய
தயரதன் ;  ‘நன்று சொல்லினை - நல்லதையே சொன்னாய் ;  நம்பியை
நளிமுடி சூட்டிநின்று
- குணங்களால் நிறைந்தவனான இராமனுக்குப்
பெருமை பொருந்தியமகுடத்தை அணிவித்து ;  நின்றது செய்வது -
மேலே செய்ய நின்றதைச்செய்வோமாக ;  நீயே விரைவினில் சென்று -
நீயே விரைவாகப் போய் ; திருமகன் கொழுநனை