பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 301

     மன்னன் எவ்வழி அவ்வழி மன்னுயிர் ஆதலின்,  அயோத்தி நகரின்
ஆவி நீக்குவார்  போல்ஆயினர் என்பதை நகரின்மேல் ஏற்றிக் கூறினார்.
உயிர்  உலைகிறது.  துன்பம்  மிகுகிறது. அழகுகெடுகிறது, ஐம்பொறி
கலங்குகிறது  இத் தனையும் உயிர் போவதற்கு முன் நிகழ்வனவாம்.     212

இராமன் சீதை இருக்குமிடம் சேறலும் அவள் திடுக்குறலும்  

1818.உயங்கி அந் நகர்
     உலைவுற, ஒருங்கு, உழைச்சுற்றம்
மயங்கி ஏங்கினர்; வயின்வயின்
     வரம்பு இலர் தொடர,
இயங்கு பல் உயிர்க்கு ஒர்
     உயிர் என நின்ற இராமன்
தயங்கு பூண் முலைச் சானகி
     இருந்துழிச் சார்ந்தான்.

     அந்நகர் - அந்த அயோத்தி நகரம்; உயங்கி - வாடி; உலைவுற-
வருந்த;  ஒருங்கு - ஒருசேர;  உழைச் சுற்றம் - ஏவல் செய்வோர்;
மயங்கிஏங்கினர் - அறிவு கலங்கி அழுது; வயின் வயின்- அங்கங்கே;
வரம்பிலர்தொடர - அநேகர் பின்பற்றி வர;  இயங்கு பல் உயிர்க்கு
ஓர் உயிர் என நின்றஇராமன் -
சஞ்சரிக்கின்ற பல உயிர்களையும்
உடலாகக் கொண்டு அவற்றுக்கு ஒப்பற்ற உயிராக இருக்கின்ற  இராமன்;
தயங்கு - விளங்குகின்ற;  பூண் முலைச் சானகி -அணிகலன் அணிந்த
தனங்களை  உடைய சீதை;  இருந்துழிச் சார்ந்தான் - இருந்த
அரண்மனையை அடைந்தான்.

     உழைச் சுற்றம் அருகிருந்து வேலை செய்வோர். ‘உயிர்க்கு உயில் என
நின்ற இராமன்’என்பதனைத் திருமாலாகிய பரம்பொருள் தத்துவத்தில்
உயிர்க்குயிராய் உள்நின்று உணர்த்தும்தன்மையை நோக்கித் கூறியதாகவும்
கொள்ளலாம்.                                                213

1819.அழுது, தாயரோடு அருந் தவர்,
     அந்தணர், அரசர்,
புழுதி ஆடிய மெய்யினர்,
     புடை வந்து பொரும,
பழுது சீரையின்
     உடையினன் வரும்படி பாரா,
எழுது பாவை அன்னாள்,
     மனத் துணுகமொடு எழுந்தாள்.

     அந்தணர் - வேதியர்;  அருந்தவர் - அரிய முனிவர்;  அரசர் -;
(ஆகிய அனைவரும்) அழுது  -;  புழுதி ஆடிய மெய்யினர் - புழுதி