தேரில் சென்ற இராமனைக் கண்ட பெண்டிர் செயல் 1364. | முறையின் மொய்ம் முகில் என முரசு ஆர்த்திட, மடவார் இறை கழன்ற சங்கு ஆர்த்திட, இமையவர், ‘எங்கள் குறை முடிந்தது’ என்று ஆர்த்திட, குஞ்சியைச் சூழ்ந்த நறை அலங்கல் வண்டு ஆர்த்திட, தேர்மிசை நடந்தான். |
முரசு - பேரிகைகள் ; முறையின் - வரிசையாக ; மொய்ம்முகில் என ஆர்த்திட - ஒன்றுசேர்ந்த மேகம் போல முழங்கவும் ; மடவார் இறை கழன்ற சங்கு ஆர்த்திட - மடப்பம் பொருந்திய பெண்களினுடைய முன்னங்கையினின்று கழன்று விழுந்த சங்கு வளையல்கள் ஒலிக்கவும் ; இமையவர் -தேவர்கள் ; எங்கள் குறை முடிந்தது என்று ஆர்த்திட- எங்கள் வருத்தம்தீர்ந்தது என்று ஆரவாரிக்கவும் ; குஞ்சியைச் சூழ்ந்த- தன் திருமுடியில்சுற்றியிருந்த; நறை அலங்கல் வண்டு - தேன் சொரியும் கண்ணிகளில் மொய்த்தவண்டுகள் ; ஆர்த்திட - ஒலிக்கவும் ; தேர்மிசை நடந்தான் -தேரில் சென்றான். இறை - முன்கை ; சங்கு - வளை; சங்கினால் செய்யப்பட்டமையின் இப் பெயர் பெற்றது. மடவார் என்பது மடப்பம் பொருந்திய பெண்களைக் குறித்தது. 51 1365. | பணை நிரந்தன ; பாட்டு ஒலி நிரந்தன ; அனங்கன் சுணை நிரந்தன ; நாண் ஒலி கறங்கின ; நிறைப்பேர் அணை நிரந்தன, அறிவு எனும் பெரும் புனல் ; அனையார், பிணை நிரந்தெனப் பரந்தனர் ; நாணமும் பிரிந்தார். |
பணை நிரந்தன - (இராமன் தெருவில் புக) வாத்தியங்களின் ஒலிகள் நிரம்பின ; பாட்டு ஒலி நிரந்தன - பாடல்களின் ஓசைகள் நிறைந்தன ; அனங்கன் கணை நிரந்தன - மன்மதனின் மலரம்புகள் நிரம்பின ; நாண் ஒலிகறங்கின - வில் நாணின் ஒலிகள் ஒலித்தன; அறிவு எனும் பெரும் புனல் -இராமனைப் பற்றிய எண்ணம் என்னும் மிக்க வெள்ளம் ; நிறை பேர் அணை நிரந்தன - மனஅடக்கம் என்னும் பெரிய அணையைக் கடந்தன ; அனையார் - அவ்வாறானமகளிர்கள் ; நாணமும் பிரிந்தார்- நாணத்தையும் விட்டவர்களாய் ; பிணை நிரந்து |