‘இன் உயிர் தீர்ந்து’ உயிர் போகப் பெற்று வெற்றுடலோடு அயோத்திக்கு இன்றே சென்று,இதுபோலவே வெற்றுடலோடு அயோத்திக்கு இன்றே சென்று, இதுபோலவே வெற்றுடல் காட்சிகளையேஅங்கும் காண என்று பொருள் செய்தலே பொருந்தும். இனி, ‘தீர்ந்தின்று’ என்பதை ஒன்றாக்கி, உயிர் நீங்கப்பெறாமல் எனப் பொருள் கூறின், ‘அனைய’ என்கின்ற உவமை மாட்டேறு அதே போன்ற‘உயிரோடு உள்ளவர்களை’ எனவே பொருள்பட்டுச் சிறப்பின்றாகும் என்க. 19 கலிவிருத்தம் 1859. | ‘தேவியும் இளவலும் தொடர, செல்வனைப் பூ இயல் கானகம் புக உய்த்தேன் என்கோ? கோவினை உடன் கொடு குறுகினேன் என்கோ? யாவது கூறுகேன், இரும்பின் நெஞ்சினேன்? |
‘தேவியும் இளவலும் தொடர - மனைவியாகிய சீதையும் தம்பியாகிய இலக்குவனும்தொடர்ந்து வர; செல்வனை - செல்வமகனாகிய இராமனை; பூ இயல் கானகம் -மலர்கள் பொருந்திய காட்டிடத்தில்; புக உய்த்தேன் என்கோ? - செல்லும்படிவிட்டுவந்தேன் என்று சொல்வேனோ; கோவினை - இராமனை; உடன்கொடு - கூடஅழைத்துக்கொண்டு; குறுகினேன் என்கோ? - நகரத்தை அணுகினேன் என்று சொல்வேனோ; இரும்பின் நெஞ்சினேன் - இரும்பின் ஒத்து வலிய நெஞ்சுடைய யான்; யாவது கூறுகேன் -யாது சொல்வேன்?’ ‘பூவியல் கானகம்’ என்றது அதனையும் கடுமையாகக் கூறாமல் மென்மையாகக் கூறல் வேண்டும்என்பதால். 20 1850. | ‘ “தாருடை மலரினும் ஒதுங்கத் தக்கிலா வாருடை முலையொடும், மதுகை மைந்தரைப் பாரிடைச் செலுத்தினேன், பழைய நண்பினேன், தேரிடை வந்தனென், தீது இலேன்” என்கோ? |
‘பழைய நண்பினேன் - நெடுங்கால நண்பனாகிய யான்; தார் உடை மலரினம்ஒதுங்கத் தக்கிலா - மாலையாகத் தொடுக்கும் மலரினும் நடப்பதற்குத் தகுதியில்லாத; வாருடை முலையொடு - கச்சணிந்த நகிலாளாகிய சீதையோடு; மதுகை மைந்தரை -வலிமையுடைய குமாரர்களை; பாரிடை - காட்டு நிலத்தில்; செலுத்தினேன் -(நடந்து செல்லுமாறு) அனுப்பிவிட்டேன்; தீதிலேன் - ஒரு தீமையும் இல்லாதவனாய்; தேரிடை வந்தனன் என்கோ?’- தேர் மேலே ஏறி ஊர் வந்து சேர்ந்தேன் என்றுசொல்வேனோ? சீதையின் மென்மைத்தன்மையை ‘மலரினும் நடத்தற்கு வருந்தும்’ என்பதால் கூறினார். ‘தேரிடை வந்தனன்’ என்பது அவர்களை நடக்க வைத்து’ என்னும் குறிப்பு உணர்த்திற்று. 21 |