அனைவரும் அரசனைத் தேற்றியிருப்ப நான் நீ காடு சென்ற செய்தி கூறி அவனுயிரைஅழிக்கின்றவ னாய்விடுவேனோ என அஞ்சுகிறான். 23 1863. | ‘ “அங்கிமேல் வேள்வி செய்து அரிதின் பெற்ற நின் சிங்க ஏறு அகன்றது” என்று உணர்த்தச் செல்கெனோ? எங்கள் கோமகற்கு, இனி, என்னின், கேகயன் நங்கையே கடைமுறை நல்லள் போலுமால்!’ |
‘அங்கிமேல் வேள்வி செய்து - நெருப்பின்கண் அசுவமேதம், புத்திர காமேட்டிமுதலிய யாகங்களைச் செய்து; அரிதின் பெற்ற - அருமையாகப் பெற்றெடுத்த; உன்சிங்க ஏறு அகன்றது’ - உன்னுடைய ஆண்சிங்கம் காடு சென்றுவிட்டது; என்று -; உணர்த்த- சொல்ல; செல்கெனோ? - செல்லக் கடவேனோ; இனி-; எங்கள் கோமகற்கு- தசரதனுக்கு; என்னின் - என்னைக்காட்டிலும்; கடைமுறை - இறுதியாகப் பார்க்குமிடத்து; கேகயன் நங்கையே - கைகேயியே; நல்லள். போலும் - நல்லவளாவாள் போலும். என்னைவிடக் கைகேயி நல்லவள் என்றான்! கைகேயி வார்த்தை கேட்டும் உயிரோடு இருந்ததசரதன் என்வார்த்தை கேட்டவுடனேயே உயிரை விடுவான் என்று சுமந்திரன் வருந்தினன். ‘ஆல்’ஈற்றசை. 24 1864. | முடிவுற, இன்னன மொழிந்த பின்னரும், அடி உறத் தழுவினன், அழுங்கு பேர் அரா இடி உறத் துவளுவது என்னும் இன்னலன்; படி உறப் புரண்டனன்; பலவும் பன்னினான். |
முடிவு உற - தன் கருத்து (இராமனை மீள அழைத்துச் சேறலே என்பது) முடிவாகத்தெரியும்படி; இன்னன - இந்த வார்த்தைகளை; மொழிந்த பின்னரும் - சொல்லியபிறகும்; இடி உற - இடி ஒலி கேட்டு; அழுங்கு பேர் அரா - மனம் வருந்தும்பெரும்பாம்பு; துவளுவது - துடித்துச் சோர்கின்றது; என்னும் - என்றுசொல்லத்தக்க; இன்னலன் - துன்பம் உடையவனாய்; அடி உறத் தழுவினன் -இராமனது கால்களை நன்கு பற்றிக்கொண்டு; பலவும் பன்னினான் - பலவார்த்தைகளையும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு; படிமிசைப் புரண்டனன் - பூமியில் விழுந்து புரண்டான். |