பக்கம் எண் :

34அயோத்தியா காண்டம்

     மண்டலம் தரு மதி கெழு - வட்ட வடிவமாகிய சந்திரன் போலும்
முகம் அமைந்த ;  மழை முகில் அனைய - கரிய மேகத்தைப் போன்ற ;
அண்டர் நாயகன் - தேவர்களுக்குத் தலைவனான இராமபிரானது ;
வரைபுரை அகலத்துள்அலங்கல் - மலையை நிகர்த்த மார்பில் உள்ள
மாலையில் ;  தொண்டைவாய்ச்சியர் - கொவ்வைக் கனி போன்ற சிவந்த
இதழ்களைக் கொண்ட மகளிரின்; நிறையொடுங் நாணொடும் தொடர்ந்த-
மனவடக்கமும் நாணமும் ஆகிய பண்புகள் முன்னேபோகப் பின்னே
தொடர்ந்த; கெண்டையும் உள - விழிகளாகிய கெண்டைகளும்உள்ளன;
கிளை பயில் வண்டொடும் கிடந்த - அவை அந்த மாலையில் முன்னரே
தேனைநாடிவந்து உள்ளனவாகிய கிளை என்னும் இசையைப் பழகிய
வண்டுகளோடு தங்கின.

     மண்டலம் தருமதி என்பது முழுமதியைக் குறித்தது. ஈண்டு மதி
ஆகுபெயராய். அதுபோலும் இராமபிரானது முகத்தைச் சுட்டியது.
இராமபிரான் திருமுகத்துக்குச் சந்திரனும்,திருமேனிக்கு மழைமுகிலும் ஒப்பு.
கிளை - கைக்கிளை என்னும் பண்.                               54

1368.சரிந்த பூ உள, மழையொடு கலை உறத் தாழ்வ ; 
பரிந்த பூ உள, பனிக் கடை முத்துஇனம் படைப்ப ; 
எரிந்த பூ உள, இள முலை இழை இடை நுழைய ; 
விரிந்த பூ உள, மீனுடை வானின்றும் வீழ்வ.

     மழையொடு கலை உறத் தாழ்வ - மேகம் போன்று வீழ்வனவாகிய
கூந்தலொடு உடைகளும் நிலத்தை அடைய ;  சரிந்த பூ உள - சிந்திய
பூக்கள்உள்ளன ;  பனிக் கடை முத்து இனம் படைப்ப - குளிர்ச்சி
பொருந்தியகடைக்கண்கள் முத்துக் கூட்டங்களைத் தோற்றுவிக்க ; பரிந்த
பூ உள
- அவர்கள்எடுத்தெறிந்த மலர்களும் உள்ளன; இளமுலை இழை
இடை நுழைய -
இளமையான மகளிர்தனங்களில் கிடந்த
அணிகலன்களின் ஊடே நுழைதலால் ;  எரிந்த பூ உள - கருகிய
பூக்களும் உள்ளன ;  மீனுடை வானின்று வீழ்வ - விண்மீன்கள் நிறைந்த
வானத்திலிருந்து தேவர்கள் வீசுதலால் வீழ்வனவாகிய ; விரிந்த பூ உள -
நன்றாகமலர்ந்த மலர்களும் உள்ளன.

     இராமன் தேர் சென்ற வீதியில் மகளிர் விரகத்தால் சரிந்தனவும்,
பரிந்தனவும், எரிந்தனவும் ஆகிய மலர்களும், விண்ணவர் மகிழ்ச்சியால்
சொரிந்த மலர்களும்கிடந்தன. தாழ்வ, வீழ்வ - வினையாலணையும்
பெயர்கள். இளமுலை இழை - ஏழாம் வேற்றுமை உருபும்பயனும்
உடன்தொக்க தொகை. மகளிர் சூடிய பூக்கள் வீழ்வது தீக்குறி (அபசகுனம்)
ஆகும். இராமனுக்குத் துன்பம் நேரவிருப்பதைச் சுட்டுவதாக அமைவன.  55

1369.வள் உறை கழித்து ஒளிர்வன
     வாள் நிமிர் மதியம்