வானோர் - தேவர்கள்; கேள்விச் செல்வம் - இராமன் புகழ் கேட்டல்ஆகிய செல்வத்தை; துய்க்க - அனுபவிக்க; வயிற்று ஓர்கிளை தந்தாள் - தன்வயிற்றிலிருந்து ஒப்பற்ற புதல்வனைத் தந்தவளாகிய கோசலை (தயரதனை நோக்கி); ‘வேள்விச் செல்வம் துய்த்தி கொல்? - முன் செய்த வேள்களின் பயனை துய்த்திகொல் -அனுபவிக்சச் சென்றாயோ; மெய்ம்மை - சத்தியம் என்கிற; துணை இன்மை -தனக்குச் சமானம் இல்லாத; சூழ்வின் செல்வம் - ஒன்றை உறுதி யாகப் பற்றிய உன் ஆலோசனையின் பயனை; துய்த்திகொல் - அனுபவிக்கச் சென்றாயோ; தோலா -தோல்வி அடையாத; மனு நூலின் வாழ்வின் செல்வம் - மனு முறைப்படி அரச வாழ்வுநடத்தியதால் ஆகிய பயனை; துய்த்திகொல்’- அனுபவிக்கச் சென்றாயோ; என்றனள் - கேள்வி - கேட்டற்குரிய புகழ். ‘தீங்கவி செவிகள்ஆரத் தேவரும் பருகச் செய்தான்’ (32)என்ற கருத்து இங்கு நினையத் தக்கது. கிளை - உறவு கோசலைக்கு உறவாவது புதல்வன் என்பதே. வேள்வி, சத்தியம், செங்கோன்மை இவற்றைக் காத்தொழுகிய தசரதன் இவற்றின் பயனை அனுபவிக்கச் சென்றானோ என்றாள். ‘கொல்’ ஐயவினா. ‘மன்’ கழிவுப்பொருள்; அவன் இப்போது இல்லாமையின் கழிந்தது கழிந்தது என்னும் பொருளில் வந்தது.இடைச்சொல். 68 தேவிமார் அனைவரும் வந்து புலம்புதல் அறுசீர் விருத்தம் 1908. | ஆழி வேந்தன் பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற, தோழி அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர் சோர, ஊழி திரிவது எனக் கோயில் உலையும் வேலை, மற்று ஒழிந்த மாழை உண்கன் தேவியரும், மயிலின் குழாத்தின் வந்து இரைத்தார். |
ஆழிவேந்தன் பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற - சக்கரவர்த்தியின் மூத்தபட்டத்தரசியாகிய கோசலை அப்படிப்பட்ட வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி அழுதுபுலம்ப; தோழி அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர்சோர - அவளுடைய உயிர்த்தோழியாகிய சுமித்ரையாகிய இளைய பட்டத்தரசியும் நிலைகுலைந்து புலம்பி உயிர் தளர;ஊழி திரிவது என - பிரளய காலத்தில் உலகம் கழல்வது போல; கோயில் உலையும்வேலை - அரண்மனை நிலைதடுமாறுடம் போது ; மற்று -; ஒழிந்த மாழை உண்கண் தேவியரும்- மிகுந்துள்ள அறியாமை கொண்ட மை உண்ட கண்ணையுடைய அறுபதினாயிரம் தேவிமார்களும்; மயிலின் குழாத்தின்- |