பக்கம் எண் :

36அயோத்தியா காண்டம்

போல (தைலமாட்டுப் படலம், 60). இருந்தஉழி - இருந்துழி புக்கான் - புகு
என்னும் பகுதி இரட்டித்துக் காலம் காட்டிற்று.                      57

தயரதன் இராமனைத் தழுவுதல்  

1371.மாதவன்தனை வரன்முறை வணங்கி,
     வாள் உழவன்
பாத பங்கயம் பணிந்தனன் ; 
     பணிதலும், அனையான்,
காதல் பொங்கிட, கண் பனி உகுத்திட,
     கனி வாய்ச்
சீதை கொண்கனைத்
     திரு உறை மார்பகம் சேர்த்தான்.

     வரன்முறை மாதவன்தனை வணங்கி - தொன்றுதொட்டுவரும்
முறைப்படி பெரியதவமுனியாகிய வசிட்டனைத் தொழுது ;  வான் உழவன்
பாத பங்கயம் பணிந்தனன்
-வாட்போரில் வல்லவனான தயரத மன்னன்
திருவடியாகிய தாமரைகளை வணங்கினான் ;  பணிதலும் - அவ்வாறு
இராமன் வணங்கிய அளவில் ;  அனையான் - அவ்வாறுவணங்கப்பெற்ற
தயரதன் ;  காதல் பொங்கிட - இராமன் மீது கொண்ட பாசம்மேலிட ;
கண்பனி உகுத்திட - கண்கள் இன்பக் கண்ணீரைச் சொரிந்திட ;
கனிவாய்ச் சீதை கொண்கனை - கனிபோன்ற இதழ்களையுடைய சீதையின்
கணவனாகியஇராமனை ;  திருஉறை மார்பகம் சேர்த்தான் - திருத்
தங்கிய தன் மார்போடுஅணைத்துக் கொண்டான்.

     வாள் உழவர் - வாட்போரில் வல்லவர். வில்லேர் உழவர் என்று
திருவள்ளுவர் வீரர்களைக் குறித்தல் கருதத்தக்கது (குறள். 872) திரு -
அரசச் செல்வம்.                                               58

1372. ‘நலம் கொள் மைந்தனைத் தழுவினன்’
     என்பது என்? நளி நீர்
நிலங்கள் தாங்குறு நிலையினை
     நிலையிட நினைந்தான்,
விலங்கல் அன்ன திண் தோளையும்,
     மெய்த் திரு இருக்கும்
அலங்கல் மார்பையும், தனது தோள், மார்பு,
     கொண்டு அளந்தான்.

     நலம்கொள் மைந்தனை - நன்மைகள் அனைத்தையும் கொண்ட
தன்மகனாகிய இராமனை ;  தழுவினன் என்பது என் - தந்தையாகிய
தயரதன்அணைத்துக்கொண்டான் என்று சொல்வது எதன்பொருட்டு? ;