பக்கம் எண் :

கங்கைப் படலம் 375

வணங்கி;  ‘பாருளோர் - இப் பூமியில் உள்ளோர்;  பன்னி நீக்க அரும்
பாதகம் -
சொல்லிப் போக்க முடியாத பாவங்களை;  என்னின் - என்
மூலமாக;  (முழுகி) நீக்குவர்- போக்கிக் கொள்வார்கள்; யானும் - நானும்;
இன்று - இன்றைக்கு; என்தந்த உன்னின்- என்னைத் தந்த திருமாலாகிய
உன்னால்;  நீக்கினென் - (என்பாவங்களைப்) போக்கிக் கொண்டேன்;
யான் உய்ந்தனென்’ - நானும் பிழைத்தேன்;’என்றாள் - என்று
சொன்னாள்.

     பிறர் செய்த பாவங்களைப் போக்கும் கங்கை இன்று தன்னைத் தந்த
இறைவனாகிய இராமனேமுழுகியதால் தன் பாவங்களைப் போக்கிக்
கொண்டு மகிழ்ந்தாளாகக்கூறினாள்.                               17

1943.வெங் கண் நாகத் கரத்தினன், வெண் நிறக்
கங்கை வார் சடைக் கற்றையன், கற்புடை
மங்கை காண நின்று ஆடுகின்றான், வகிர்த்
திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான்.

     வெங் கண் நாகத் கரத்தினன் - கொடிய கண்ணை உடைய
யானையின் துதிக்கை போன்றநீண்ட கைகளை உடையவனான இராமன்;
வெண் நிறக் கங்கை வார் சடைக் கற்றையன் -வெண்மையான
நிறமுடைய கங்கை ஒழுகப் பெறுகின்ற சடைத் தொகுதிகளை உடையவனாய்;
கற்புடைமங்கை காண - கற்பிற் சிறந்த சீதை காணும்படியாக;  நின்
ஆடுகின்றான் -
(நீரில்) நின்று  நீராடுகின்றான்; வகிர்த்திங்கள் - பிளந்த
சந்திரனை; (பிறையை) சூடிய - தலை மேல் சூடிய;  செல்வனின் - சிவ
பெருமானைப் போல;  தோன்றினான் - தோற்றமளித்தான்.

     கங்கை யொழுகும் சடையோடு பார்வதி காண ஆடுகின்ற  பரம
சிவனைப் போல, இராமனும் சீதைகாணக் கங்கை நீர் ஒழுகுகின்ற
சடையோடு ஆடுகின்றானாம். இங்கே ஆடுதல் என்பது சொல் அளவுக்கு
சிவபெருமானோடு இராமனை ஒப்புறுத்தி இன்புறுத்துவதாம். அங்கே ஆடுதல்
நடனம்,  இங்கே நீராடுதல்என்று பொருளால் வேறுபடும். மங்கை காணல்,
கங்கை நீர் ஒழுகும் சடை உடைமை இருவர்க்கும் பொது.              18

1944.தள்ளும் நீர்ப் பெருங் கங்கைத் தரங்கத்தால்,
வள்ளி நுண் இடை மா மலராளொடும்,
வெள்ளி வெண் நிறப் பாற் கடல், மேலைநாள்,
பள்ளி நீங்கிய பான்மையின், தோன்றினான்.

     தள்ளும் நீர்ப் பெருங் கங்கைத் தரங்கத்தால் - மோதுகின்ற நீரை
உடைய பெரியகங்கையின் அலைகளால்; (அங்கே சீதையோடு முழுகி
எழுகின்ற இராமன்) வள்ளி நுண் இடை மாமலராளொடும் -