பக்கம் எண் :

376அயோத்தியா காண்டம்

கொடி போன்ற நுண்ணிய இடையை உடைய தாமரையில் வீற்றிருக்கும்
திருமகளுடன்;  வெள்ளி வெண்நிறப் பாற்கடல் -
வெள்ளி போன்ற
வெண்மையான நிறத்தை உடைய பாற்கடலில் மேல்; மேலைநாள் -
முன்னொரு காலத்தில்; பள்ளி நீங்கிய பான்மையில் - அனந்தசயனத்தில்
அறிதுயில் ஒழிந்து எழுந்து  நின்ற தன்மை போல;  தோன்றினான் -
தோற்றமளித்தான்.

     கங்கை அலைகள் வெண்மையாய் உள்ளன. அதன்மேல் இராமனும்
சீதையும் தோன்றுதல் திருப்பாற்கடலில் துயிலும் திருமால் திருமகளோடு
எழுந்து நின்றாற் போலும்என்றார்.                                19

1945.வஞ்சி நாண இடைக்கு, மட நடைக்கு
அஞ்சி அன்னம் ஒதுங்க, அடி அன்ன
கஞ்சம் நீரில் ஒளிப்ப, கயல் உக,
பஞ்சி மெல் அடிப் பாவையும் ஆடினாள்.

     பஞ்சின் மெல்லடிப் பாவையும்- செம் பஞ்சு போன்ற மென்மையான
பாதங்களை உடையசீதையும்;  இடைக்கு வஞ்சி நாண - தன்இடைக்கு
வஞ்சிக் கொடி நாணப்பட்டுத்தோற்றொதுங்க;  மடநடைக்கு அன்னம்
அஞ்சி ஒதுங்க -
அழகிய தன் நடைக்கு அன்னப் பறவைதோற்றுப்
பயந்து  பின்னிட;  அடி அன்ன கங்சம் நீரில் ஒளிப்ப - தன் பாதம்
போன்ற தாமரை தோற்றுத் தண்ணீரில் மறைந்துகொள்ள; கயல் உக -
கயல் மீன்கள் (கண்ணுக்குத்தோற்றுக்) கெட;  ஆடினாள் -  நீராடினாள்.

     வஞ்சி, அன்னம், தாமரை, கயல் ஆகியவை நீரில் உள்ளவை. நீராடும்
சீதையின்உறுப்புநலன் கண்டு அவை தோற்றதாகக் கற்பனை செய்தார்.
கயல் என்பதனால் கண்ணுக்குத் தோற்றுஎன்பது  வருவிக்கப் பெற்றது.  20

1946.தேவதேவன் செறி சடைக் கற்றையுள்
கோசை மாலை எருக்கொடு கொன்றையின்
பூவும் நாறவள்; பூங்குழல் கற்றையின்
நாவி நாள்மலர் கங்கையும் நாளினாள்.

     கங்கையும் - கங்கா தேவியாகிய நதியும்;  தேவ தேவன் - சிவ
பிரானது; செறி சடைக் கற்றையுள் - செறிந்த சடைக் கற்றைக்குள்;
(நெடுநாள் இருந்ததனால் உளதான) கோவை மாலை எருக்கொடு -
எருக்கம் பூமாலைச் சரத்தோடு; கொன்றையின்பூவும் - கொன்றை மலர்
மணமும்; நாறலள் - இப்பொழுது  வீசப் பெறாதவனாய்; பூங்குழல்
கற்றையின் -
(சீதையின்) அழகமைந்த கூந்தல் தொகுதியில் உள்ள; நாவி-
கத்தூரிப் புனுகு எண்ணெய் மணமும்; நாள்மலர் - அன்றலர்ந்த மலர்களின்
மணமும்;  நாளினள் - வீசப் பெற்றாள்.