பக்கம் எண் :

கங்கைப் படலம் 377

     சிவபிரான் சடையில் நெடுநாளாக உள்ள கங்கை அங்கே உள்ள
கொன்றை,  எருக்கு முதலிய மலர்மணம் வீசவேண்டியிருக்க,  சீதை
ஆடுதலால் அது நீங்கி சீதையின் கூந்தல் நாவி, மலர் மணம்வீசப்
பெற்றவளாக ஆனாள் என்பது  உயர்வு நவிற்சியணி. இக் கற்பனை
முன்னும் வந்தது (42).                                           21

1947.நுரைக் கொழுந்து எழுந்து ஒங்கி நுடங்கலால்
நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி,
உரைத்த சீதை தனிமையை உன்னுவாள்,
திரைக்கை நீட்டி, செவிலியின் ஆட்டினாள்.

     நுரைக் கொழுந்து எழுந்து ஒங்கி நுடங்கலால் - நுரைகளாகிய
வெண்மையானகொழுந்துகள் நீரின்மேல் ஓங்கி எழுந்து வளைந்து
சூழ்வதால்;  நரைத்த கூந்தலின் -நரை பாய்ந்த கூந்தலை உடையாள்
போல உள்ள;  நங்கை மந்தாகினி - பெண்ணாகிய கங்கை;உரைத்த -
பாராட்டப் பெறுகின்ற;  சீதை - சீதையினது;  தனிமையை -பெண்டிர்
துணை இல்லாத தனிமையை; உன்னுவாள் - கருதுபவளாய்; செவிலியின் -
செவிலித் தாய் போல;  திரைக் கை நீட்டி - அலைகளாகிய கைகளை
நீட்டி;  ஆட்டினாள் - நீராட்டினாள்.

     கங்கை செவிலித்தாயாக இருந்து சீதையை நீராட்டுவதாகக் கற்பனை
செய்தார்.செவிலித்தாய் என்பதற்கு ஏற்பக் கங்கைக்கு நரைத்த கூந்தலாக
நுரைக்கொழுத்தைக் கூறினார்.“நரை விராவுற்ற நறுமென் கூந்தல் செம்முது
செவிலியர்” (அகநா. 254) என்பதும்காண்க.                         22

1948.மங்கை வார் குழல் கற்றை மழைக் குலம்
தங்கு நீரிடைத் தாழ்ந்து குழைப்பன,
கங்கை யாற்றுடன் ஆடும் கரியவள்
பொங்கு நீர்ச் சுழி போவன போன்றவே.

     மங்கை வார் குழல் கற்றை மழைக்குலம் - சீதையின் நீண்ட
கூந்தல் தொகுதியாகியமேகக் கூட்டம்;  தங்கும் நீரிடைத் தாழ்ந்து
குழைப்பன -
அவள் குளிக்கின்றநீரிடத்து  உள் தாழ்ந்து  சுழலுவன (எது
போலும் எனில்); கங்கையாற்றுடன் ஆடும் கரியவள் -கங்கை
யாற்றுடனே வந்து  கலக்கின்ற யமுனா நதியின்;  பொங்கு நீர்ச்சுழி -
மேல்எழும்பிய கரிய நீர்ச்சுழிகள்;  போவன போன்ற - போகின்ற
தன்மை போலும்.

     கங்கை வெண்ணிறமுடையது. யமுனை கருநிறம் உடையது. சீதையின்
கூந்தல் முழுகுங்கால் நீரில்சுழலுதல் யமுனையின் சுழி போல்
தோன்றுவதாகக் கற்பனை. கங்கையும் யமுனையும் கலக்கின்ற இடம்
பிரயாகையாம்.                                                23

1949.சுழிபட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்று, தன்
விழியின் சேல் உகள் வால் நிற வெள்ளத்து,