பக்கம் எண் :

378அயோத்தியா காண்டம்

 முழுகித் தோன்றுகின்றாள், முதல் பாற்கடல் -
அழுவத்து அன்று எழுவாள் எனல் ஆயினாள்.

     சுழிபட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்று - சுழிகள் உண்டாகப் பெற்று
மேல் எழும்பிஅசைகின்ற பேரொலி உடைய கங்கை ஆற்றில்;  தன்
விழியின்சேல் உகள் -
தன்கண்களைப் போல் மீன்கள் துள்ளுகின்ற;
வால் நிற வெள்ளத்து - வெண்மையான நிறமுடையநீர்ப்பெருக்கில்;
முழுகித் தோன்றுகின்றாள் - முழுகி எழும்புகின்ற சீதை; முதல்- ஆதி
நாள்; பாற்கடல் அழுவத்து - பாற்கடற் பெருக்கிலே; அன்று எழுவாள் -
அன்று தோன்றியவளாகிய திருமகள்;  எனல் ஆயினாள் -  என்று
சொல்லும்படிதோன்றினாள்.

     கங்கையின் வெண்ணீர்ப் பெருக்கில் முழுகி மேல் எழும் சீதை
திருப்பாற்கடல் கடைந்தபோதுஅதன் பரப்பின் மேல் எழுந்த திருமகள்
போல் வாள் ஆயினள் என்க.                                    24

1950.செய்ய தாமரைத் தாள் பண்டு தீண்டலால்
வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள்
ஐயன் மேனி எலாம் அளைந்தாள், இனி,
வையம் மா நரகத்திடை வைகுமே?

     செய்ய தாமரைத் தாள் பண்டு தீண்டலால் - சிவந்த செந்தாமரை
போலும்திருமாலின் (இராமனின்) திருவடிகள் பண்டு தொடப்பெறுதலால்;
வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள் - உலகோரது கொடிய பாவங்களை
எல்லாம் போக்கி விளங்குபவனாகிய கங்கை; (இப்போது இராமனாகிய
திருமால் நீராடலால்) ஐயன் மேனி எல்லாம் அளைந்தாள் -இராமனது
திருமேனி முழுதும் தீண்டப் பெற்றவளாக ஆனாள்;  இனி - இனிமேல்;
வையம்- கங்கையில் முழுகும் இவ் உலகம்; மா நரகத்திடை வைகுமே -
கொடிய நரகத்திடத்துத் தங்கமோ (தங்காது).

     திருவடி பட்டது  திருவிக்கிரமன் ஆனபோது. திருவடி அளவிலேயே
கொடிய பாவங்களைப்போக்குபவன் இப்போது  திருமேனி முழுதும்
பட்டபடியால் வையத்தை நரகத்திலிருந்து  நீக்குவாள்என்பது சொல்லவும்
வேண்டுமோ என்றவாறாம்.                                       25

இராமன் எரி வளர்த்து வழிபட்டு முனிவர் விருந்து ஏற்றல்  

1951.துறை நறும் புனல் ஆடி, கருதியோர்
உறையுள் எய்தி, உணர்வுடையோர் உணர்
இறைவற் கைதொழுது, ஏந்து எரி ஓம்பி, பின்
அறிஞர் காதற்கு அமை விருந்து ஆயினான்.