1374. | ‘ஐய ! சாலவும் அலசினென் ; அரும் பெரு மூப்பும் மெய்யது ஆயது ; வியல் இடப் பெரும் பரம் விசித்த தொய்யல் மா நிலச் சுமை உறு சிறை துறந்து, இனி யான் உய்யல் ஆவது ஓர் நெறி புக, உதவிட வேண்டும். |
‘ஐய - ஐயனே ! சாலவும் அலசினென் - மிகவும்தளர்ந்தேன் ; அரும் பெரு மூப்பும் மெய்யது ஆயது - தாங்குதற்கு அரியதும் பெரியதுமான வயோதிகமும் என் உடம்பில் தோன்றிவிட்டது ; வியல் இடப் பெரும்பரந்த விசித்த - அகன்ற இடத்தைக் காக்கும் பெரிய பாரமானது கட்டப்பட்ட ; தொய்யல் மா நிலச்சுமை - துன்பத்திற்குக் காரணமாகிய பெரிய அரசாட்சியை நடத்தும்பொறுப்பாகிய ; உறு சிறை துறந்து - மிக்க சிறையை விட்டுவிட்டு ; இனி யான் உய்யல் ஆவது - இனி நான் பிழைக்கலாவதாகிய ; ஓர் நெறி புக -ஒப்பற்ற வழியில் செல்ல ; உதவிட வேண்டும் - உதவி செய்ய வேண்டும்.’ தொய்யல் - துன்பம் ; சோர்வும் ஆம். சுமை - பொறுப்பு ; ‘என் தலையில் இவனைக் காக்கும் சுமை விழுந்தது’ என்னும் பேச்சுவழக்கில் இதற்கு இப்பொருள் இருத்தலைக் காணலாம். 61 1375. | ‘ “உரிமை மைந்தரைப் பெறுகின்றது, உறு துயர் நீங்கி, இருமையும் பெறற்கு” என்பது பெரியவர் இயற்கை ; தருமம் அன்ன நின்-தந்த யான், தளர்வது தகவோ? கருமம் என்வயின் செய்யின், என் கட்டுரை கோடி. |
‘உரிமை மைந்தரைப் பெறுகின்றது - எல்லா உரிமைகளையும் உடையபிள்ளையை ஒருவர் பெறுவது ; உறு துயர் நீங்கி - மிக்க துயரத்தினின்றும்விலகி ; இருமையும் பெறற்கு என்பது - இம்மை மறுமை இன்பங்களை அடைவதற்காகும்என்பது ; பெரியவர் இயற்கை - பெரியோரது இயல்பாக உள்ளது ; தருமம்அன்ன நின் தந்த யான் - அறமே போன்ற நின்னை மகனாகப் பெற்ற நான் ; தளர்வது தகவோ - மனத் தளர்ச்சியடைதல் தக்கதோ? (அன்று) ; என்வயின் கருமம் செய்யின் - (ஆதலால்) என்மீது செய்தற்குரியது செய்ய |