குளகச் செய்யுள். ‘இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான்’ (1961) என்னும் செய்யுள்அடியிற் சென்று முடியும். இனி வரும் செய்யுள்களில் குகனைப் பற்றிய அறிமுகத்தைத் தொடர்கிறார்கவிஞர். 1 1954. | துடியன், நாயினன், தோற் செருப்பு ஆர்த்த பேர் - அடியன், அல செறிந்தன்ன நிறத்தினான், நெடிய தானை நெருங்கலின், நீர் முகில் இடியினோடு எழுந்தாலன்ன ஈட்டினான். |
(குகன் ) துடியன் - துடி என்னும் பறை உடையவன்; நாயினன் - வேட்டைநாய்களை உடையவன்; தோற் செருப்பு ஆர்த்த பேர் அடியன் - தோலாற் செய்த மிதியடிஇறுக்கிய பெரிய பாதங்களை உடையவன்; அல் செற்நிதன்ன நிறத்தினான் - இருள்நெருங்கித் திரண்டால் ஒத்த கருநிறம் உடையவன்; நெடிய தானை நெருங்கலின் - தன்னுடையமிகப்பெரிய சேனை நெருங்கி் வருதலின்; நீர் முகில் - பெய்யும் மேகம்; இடியினோடு எழுந்தால் அன்ன ஈட்டினான் - இடியோடு கூடி மேற் கிளம்பினாற் போன்ற தன்மைகொண்டவன். மேகம் குகனுக்கும், இடி ஆர்ப்பரிப்பு அவன் சேனைக்கும் உவமையாம். வேட்டுவராதலின் துடி, நாய் முதலியன கூறப்பெற்றன. 2 1955. | கொம்பு துத்தரி கோடு அதிர் பேரிகை பம்பை பம்பு படையினன், பல்லவத்து அம்பன், அம்பிக்கு நாதன், அழி கவுள் தும்பி ஈட்டம் புரை கிளை சுற்றத்தான். |
கொம்பு - ஊது கொம்பு; துத்தரி - துத்தரி என்னும் பறை; கோடு- சங்கு; அதிர்பேரிகை - ஒலிக்கின்ற பெருமுரசு; பம்பை - இருதலைப் பறை முதலிய;பம்பு படையினன் - வாத்தியங்கள் நிரம்பிய சேனையை உடையவன்; பல்லவத்து அம்பன்- தளிர் போலச் சிவந்த நிறம் படைத்த அம்பினை உடையவன்; அம்பிக்கு நாதன் -நாவாய்களுக்குத் தலைவன்; அழிகவுள் தும்பி ஈட்டம் புரை கிளை சற்றத்தான் - மதநீர் பெருகுகின்ற யானைத் தொகுதியை ஒத்த உறவினர்களால் சுற்றப்பட்டவன். கொம்பு முதலியன வேடரின் வாத்திய விசேடம், பல்லவம் என்பதே அம்பு என்னும் பொருள்உடையது ஆதலின் பல்லவமாகிய அம்பு எனலும் ஆம். ‘கூர்ப்புறு பல்லவம் கொண்ட தூணி’ என்பது கந்தபுரானம். ‘ஆயிரம் அம்பிக்கு நாயகன்’ (1953.) என்றவர் மீண்டும் அம்பிக்கு நாதன் என்றது இராமபிரானுக்குக் குகன் உதவும் தன்மையில் அம்பி சிறப்பிடம் பெறுதலின் பலவிடங்களிலும்கூறுவர். 3 |