பெண்ணை வன் செறும்பின் பிறங்கிச் செறி - பனைமரத்தினது வலிய சிறாம்பு போலவிளங்கி நெருங்கியுள்ள; வண்ண வன் மயிர் - கருநிறம் படைத்த வலிய மயிர்கள்; வார்ந்து உயர் முன் கையன் - நீண்டு ஒழுகப்பெற்றுள்ள முன்கையை உடையவன்; கண் அகன்தடமார்பு எனும் கல்லினன் - இடமகன்ற விசாலமான மார்பு என்கின்ற கல்லினை உடையவன்; என்ணெய் உண்ட இருள்புரை மேனியன் - எண்ணெய் பூசப் பெற்ற இருளை ஒத்த கரிய பளபளப்பானஉடம்பை உடையவன். பனஞ்செறும்பு கருமைக்கும், மேல் குத்தி நிற்கும் தன்மைக்கும், முன்கை மயிர்க்கும்உவமையாம். “இரும்பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர்” “பனஞ் செறும்பு அன்ன பன் மயிர்முன்கை” என்பனவற்றை நோக்குக. 6 1959. | கச்சொடு ஆர்த்த கறைக் கதிர் வாளினன், நச்சு அராவின் நடுக்குறு நோக்கினன், பிச்சராம் அன்ன பேச்சினன், இந்திரன் வச்சிராயுதம் போலும் மருங்கினான். |
கச்சொடு ஆர்த்த - அரைக்கச்சிலே கட்டிய; கறை கதிர் வாளினான் -இரத்தக் கறை படிந்துள்ள ஒளிபடைத்த வாளை உடையவன்; நச்சு அராவின் - விடம்பொருந்திய பாம்பைப் போல; நடுக்குறு நோக்கினன் - பிறர் நடுக்கம் அடைகின்றகொடிய கண் பார்வை உடையவன்; பிச்சாரம் அன்ன பேச்சினன் - பித்தர்களைப் போலஒன்றுக் கொன்ற தொடர்பில்லாமல் பேசக்கூடிய பேச்சினை உடையவன்; இந்திரன் வச்சிராயுதம் போலும் மருங்கினான் - தேவேந்தி ரனது வச்சிராயுதம் போல மிகவும் உறுதியான இடுப்பை உடையவன், வேடர்கள் என்பதால் தெளிவற்ற பேச்சை உடையவன் என்றார். நடுப்பகுதி சிறந்து இரண்டுபக்கமும் பெருத்து இருப்பதனால் வச்சிரப்படை போலும் இடுப்பு என்றார். 7 1960. | ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர் நாற்றம் மேய நகை இல் முகத்தினான், சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான், கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான்.1 |
ஊற்றமே மிக - வலிமை மிகும்படி; ஊனொடு மீன் நுகர் - விலங்குகளின்இறைச்சியோடு மீனையும் தின்று; நாற்றம் மேய - புலால் நாற்றம் பொருந்திய; நகை இல் முகத்தினான் - சிரிப்பு என்பது சிறிதும் இல்லாத (கடு கடுப்பான) முகத்தினைஉடையவன்; சீற்றம் இன்றியும் - கோபம் இல்லாத போதும்; தீ எழ நோக்குவான் -கனல் கக்குமாறு பார்ப்பவன்; கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான் - இயமனும் பயப்படும்படிஅதிர்ந்து ஒலிக்கின்ற குரலை உடையவன். |