பக்கம் எண் :

குகப் படலம் 385

     குகன் இலக்குவனுக்குத் தன்னை அறிவித்தல்  

1963.கூவாமுன்னம், இளையோன் குறுகி, ‘நீ
ஆவான் யார்?’ என, அன்பின் இறைஞ்சினான்;
‘தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்’ என்றான்.

     கூவா முன்னம் - குகன் அழைப்பதற்கு முன்னமே;  இளையோன்
குறுகி -
இலக்குவன் அவனைச் சென்றடைந்து; ‘நீ ஆவான் யார்’ என -
நீ யார்? என்று வினாவ; அன்பின் இறைஞ்சினான் - அன்போடு குகன்
அந்த இலக்குவனை வணங்கினான்;  (முன் அறியாதவன் ஆதலின்
அவனையே இராமனாகக் கருதி) ‘தேவா! - அரசனாகிய தெய்வமே!; நாய்
அடியேன் -
நாய் போலக் கீழான அடிமையாகிய; நாவாய் வேட்டுவன் -
கங்கையைக்கடக்க ஓடங்களை உடைய வேட்டுவச் சாதியினனாகிய
குகனாவேன்;  நின் கழல்சேவிக்க வந்தனன்- உனது திருவடிகளை
வணங்கும் பொருட்டு வந்தேன்;’ என்றான்-.

     குகன் அழைப்பதற்கும் இலக்குவன் அங்கே வருதற்கும் இடையே கால
இடைவெறியின்மையைஅறிவிக்கக் ‘கூவா முன்னம்’ என்றார்.  இராமனைச்
சேவிக்க வந்த குகன் இலக்குவனையே இராமனாகநினைத்துத் ‘தேவா! நின்
கழல் சேவிக்க வந்தனன்’ என்பது  குழந்தைத் தன்மையான மாசற்றகுகனது 
அன்பின் பொலிவை எடுத்துக் காட்டும்.                             11

இலக்குவன் குகன் வரவை இராமனுக்கு அறிவித்தல்  

அறுசீர் ஆசிரிய விருத்தம்

1964.‘நிற்றி ஈண்டு’ என்று, புக்கு
     நெடியவன் - தொழுது, தம்பி,
‘கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன்,
     நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும், தானும்; உள்ளம் தூயவன்;
     தாயின் நல்லான்;
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன்
     ஒருவன்’ என்றான்.

     தம்பி - இராமனது  தம்பியாகிய இலக்குவன்;  ‘நிற்றி ஈண்டு’
என்று
-குகனைப் பார்த்து இங்கேயே நில் என்று சொல்லி;  புக்கு -
(இராமன் இருந்ததவச்சாலையில் உள்ளே) புகுந்து; நெடியவன் தொழுது -
பெருமையிற் சிறந்துயர்ந்த இராமனைவணங்கி;  ‘கொற்றவ - அரசனே!;
உள்ளம் தூயவன் - மனத்தால்பரிசுத்தமானவன்;  தாயின் நல்லான் -
தாயைக் காட்டிலும் மிக்க அன்பையுடைய நல்லவன்;