சிங்க ஏறு அனைய வீரன் பின்னரும் செப்புவான் - ஆண்சிங்கத்தை ஒத்த இராமன்மேலும் கூறுவான்; ‘யாம் இங்கு உறைந்து நாளை எறி நீர்க் கங்கை ஏறுதும் - நாங்கள்இத்தவச்சாலையில் தங்கியிருந்து நாளைக்கு அவைவீசும் கங்கையாற்றைக் கடந்து செல்ல எண்ணியுள்ளோம் (ஆதலின்); நீ-; யாணர்ப் பொங்கும் நின் கற்றத்தோடும் போய்-புதுமை நிரம்பிய உன் உறவினர்களோடும் சென்று; உன் ஊரில் உவந்து இனிது தங்கி -உன்னடைய நகரத்திலே மன மகிழ்ச்சியோடு இனிமையாகத் தங்கியிருந்து; விடியல் - நாளைவிடியலில்; நாவாயோடும் சாருதி - மரக்கலங்களோடும் வருவாயாக;’ என்றான்-. குகனைத் தொடர்ந்து புதிய புதிய உறவினர்கள் மேலும் மேலும் வந்த வண்ணம் இருத்தலின்,‘யாணர்ப் பொங்கும் நின் சுற்றம்’ என்றான். புதியராய் வந்தாரைக் காணப் பலரும் வருதல்உலகியல்பு. 16 குகனது விண்ணப்பம் 1969. | கார் குலாம் நிறத்தான் கூற, காதலன் உணர்த்துவான், ‘இப் பார் குலாம் செல்வ! நின்னை, இங்ஙனம் பார்த்த கண்ணை ஈர்கிலாக் கள்வனேன் யான், இன்னலின் இருக்கை நோக்கித் தீர்கிலேன்; ஆனது, ஐய! செய்குவென் அடிமை’ என்றான். |
கார் குலாம் நிறத்தான் கூற - மேகம் போல் உள்ள கரு நிறம் உடையதிருமேனியனாகிய இராமன் இவ்வாறு கூற; காதலன் உணர்த்துவான் - அவனிடத்தில் பேரன்புகொண்ட குகன் சொல்வான்; ‘இப் பார் குலாம் செல்வ! - இந்தப் பூமி முழுவதும் ஆளும்செல்வத்துக் குரியவனே!’ நின்னை - உன்னை; இங்ஙனம் பார்த்த கண்ணை - இவ்வாறு சடைமுடிக் கோலத்தோடு பார்த்த கண்களை; ஈர்கிலாக் கள்வனேன் யான் -இதுகாறும் பிடுங்கி எறியாமல் உன்பால் அன்புடையவன் போல நடிக்கின்ற திருடன் யான்; இன்னலின் இருக்கை நோக்கி - இத்தகைய துன்பத்தில் இருந்தபடியைப் பார்த்து; தீர்க்கிலேன்- உன்னைப் பிரிய மாட்டாதவனாக இருக்கிறேன்; ஆனது - என்நிலைமை அவ்வாறாகியது; ஐய! - ஐயனே; அடிமை செய்குவென்’ - (உன் அருகேயேஇருந்து உனக்குரிய) தொண்டுகளைச் செய்வேன்; என்றான்-. அரச குமாரனாகிய இராமன் முடிபுனையாது சடைமுடி தரித்த கோலத்தோடு வந்தது கண்டு மனம் இரங்கித் தழுதழுத்த குகன் தன்னைத் தாழ்மைப் |