படுத்திக்கொண்டு ‘இவ்வாறு பார்த்த கண்ணைப் பிடுங்கி எறியாமல் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேனே, நான் ஒரு வஞ்சகன்’ என்ற அவலித்த தாகக் கொள்க. இராமனுடனேயே இருந்து தொண்டு செய்ய வேண்டினான் குகன். 17 குகன் வேண்டுகோளை இராமன் ஏற்றல் 1970. | கோதை வில் குரிசில், அன்னான் கூறிய கொள்கை கேட்டான்; சீதையை நோக்கி, தம்பி திருமுகம் நோக்கி, ‘தீராக் காதலன் ஆகும்’ என்ற, கருணையின் மலர்ந்த கண்ணன். ‘யாதினும் இனிய நண்ப! இருத்தி ஈண்டு, எம்மொடு’ என்றான். |
கோதை வில் குரிசில் - வெற்றிமாலை அணிந்த வில்லையுடைய இராமன்; அன்னான் கூறிய கொள்கை கேட்டான் - அக் குகனது பேச்சில் வெளிப்பட்ட அவன் மனக்கருத்தைக் கேள்வி மூலம் அறிந்தான்; சீதையை நோக்கி - சீதையைப் பார்த்து; தம்பி திருமுகம் நோக்கி - தம்பியாகிய இலக்குவனது அழகிய முகத்தைப் பார்த்து (இருவருக்கும் குகனது தோழமையில் உடன்பாடு என்பதைக் குறிப்பால் அறிந்து); ‘தீராக் காதலன் ஆகும்’என்று - நம்பால் என்றும் நீங்காத பேரன்புடையவனாவான் என்று சொல்லி; கருணையின்மலர்ந்த கண்ணன் - கருணையால் மலர்ச்சியடைந்த கண்களை உடையவனாய்; ‘யாதினும் இனியநண்ப! - எல்லாப் பொருள்களினும் இனிமையான நண்பனே; ஈண்டு எம்மொடு இருத்தி’ - இங்கே எங்களோடு (இன்று) தங்கி இருப்பாயாக;’ என்றான்-. தம்பி முன்னரே குகனை அறிமுகப்படுத்தும்போதே இராமன்பால் தன் உள்ளக்கிடக்கையைப்புலப்படுத்தினன் ஆதலின், இங்கே வேண்டப்படுவது சீதையின் உடன்பாடே ஆதலின், அதனைமுதற்கண் கூறினார் - ‘யாரினும் இனிய நண்ப’ என்னாது, ‘யாதினும்’ என அஃறிணை வாசகத்தாற்‘சொல்லி மக்களே அன்றி அன்பு செய்தற்குரிய மற்றப் பொருள்களும் அடங்கக் கூறிய நயம்அறிந்து இன்புறத்தக்கது. 18 1971. | அடி தொழுது உவகை தூண்ட அழைத்தனன், ஆழி அன்ன துடியுடைச் சேனை வெள்ளம், பள்ளியைச் சுற்ற ஏவி, வடி சிலை பிடித்து, வாளும் வீக்கி, வாய் அம்பு பற்றி |
|