இதற்கு இலக்குவனைச் சந்தேகித்துக் குகனும் குகனை ஐயுற்று அவனது
சுற்றமும் கண்ணுறங்காது காவல் செய்ததாகப் பொருள் உரைத்து நயர்
காண்பாருளர் ஆயினும், குகனாகிய தலைவனையே ஐயுற்று அவனையும்
சேர அழிக்கத் தயாராக அவனது சுற்றமாகிய சேனை இருந்ததாகக் கூறல்
குகனது நாயகத் தன்மைக்குப் பேரிழப்பாக முடியும். அன்றியும் குகனையே
இராமன்பால் அறிமுகப்படுத்தியவன் இலக்குவன் என்பது குகனும்
அறிந்ததே. குகனது வேண்டுகோளை ஏற்கும் இராமன் சீதையை நோக்கித்
தம்பி திருமுகம் நோக்கியதை’ ஆண்டிருந்த குகனும் அறியாதிரானன்றே?
திருநகர் தீர்ந்த வண்ணத்தைப் பருவரல் தம்பி கூறக் கேட்டான் அன்றே?
அவ்வாறு பல்வேறமயங்களில் இலக்குவனது தொண்டுள்ளமும், அன்பும்
நன்கு காணக்கிடைத்த குகன் இலக்குவனை ஐயுற்றான் எனல் சற்றும்
பொருந்தாது என்க. கங்கை காண் படலத்தே பரதன்பால் இலக்குவனைப்
பற்றிச் சொல்ல நேரும்பொழுது அழகனும் அவளும் துஞ்ச, வில்லை
ஊன்றிய கையோடும் வெய்துயிர்ப் போடும்... கண்கள் நீர்பொழிய...
நின்றான்.... இமைப்பிலன் நயனம்’ (2344) என்று சொல்வான் எனில்,
முன்னர் அவ்வாறு அவனை உணர்ந்ததனால் அன்றோ பின்னர் அவ்வாறு
கூறமுடிந்தது! எனவே, இலக்குவன் இராமன் பாற்கொண்ட அன்பின்
செறிவையும், இலக்குவனது தொண்டுள்ளத்தையும் அறிந்த குகன்
இலக்குவனை ஐயுற்று வில்லும் அம்புமாய்த் தான் காவல் செய்தான் எனல்
சிறிதும் பொருந்தாமையும், குகனுக்குப் பெருமையாகாமையும் அறிக.
அன்றியும் ‘தம்பி நின்றானை நோக்கி....கண்ணீர் அருவி சோர்குன்றின்
நின்றான்’ எனச் சொல்லப்படுவதிலிருந்தே அரசகுமாரர்கள் இவ்வாறு
இருக்கலாம்படி ஆயிற்றே என்கிற அவலமே குகன்பால் மேலோங்கி
நின்றமையைச் கம்பர் புலப்படுத்தினார் ஆதல் காண்க. 23
சூரியன் தோன்றலும் தாமரை மலர்தலும்
1976. | துறக்கமே முதல ஆய தூயன யாவை யேனும் மறக்குமா நினையல் அம்மா! - வரம்பு இல தோற்றும் மாக்கள் இறக்குமாறு இது என்பான்போல் முன்னை நாள் இறந்தான், பின் நாள், பிறக்குமாறு இது என்பான்போல் பிறந்தனன் - பிறவா வெய்யோன். |
பிறவா வெய்யோன் - என்றும் பிறவாது ஒருபடித்தாகவே உள்ள
சூரியன்; வரம்புஇல தோற்றும் மாக்கள் -
எண்ணிலவாய்