பக்கம் எண் :

குகப் படலம் 395

உலகில் தோன்றும் மக்கள்; இறக்குமாறு இது என்பான்போல் முன்னை
நாள் இறந்தான் -
இறப்பது  இவ்வாறு என்று அவர்களுக்கு எடுத்துக்
கூறுவானைப் போல முதல் நாள் மாலை அத்தமித்தான்;பின் நாள் -
மறுநாள் (காலையில்);  பிறக்குமாறு இது என்பான் போல் பிறந்தனன்-
பிறப்பது  இவ்வாறு என்று எடுத்துக் கூறுவான் போலத் தோன்றினான்
(இறப்பும் பிறப்பும் மாறிமாறி வருதலை உணர்வார்);  துறக்கமே முதல
ஆய தூயன யாவையேனும் -
சுவர்க்காதிபோகங்களாகச்
சொல்லப்படுகின்ற தூயனவாகிய மேலான எவையும்; (நிலையற்றவை
என்பதுஉணரப்படுதலின்) மறக்குமா நினையல் அம்மா! -
மறக்கும்படி
நினையல் வேண்டும்படியாயின வாறுஎன்னே!

     இறப்பும் பிறப்பும் மாறி மாறி வருதலைச் சூரியனால் உணர்ந்த
மாக்கள் எவ்வளவு  உயர்ந்தசுவர்க்கம் முதலியனவும் நிலையிலாதவை என
உணர்த்தலின் மறப்பாராவர் என்பதாம். அம்மா! வியப்பிடைச் சொல்.
இதனால் மக்கள் உண்மை  உணர்ந்து  இறப்பு பிறப்பு அற்று என்றும் மீளா
உலகம் ஆகிய முத்தியையே வேண்டுதற்குச் சூரியன் உதவலை
உணர்த்தினார். நினையால் -உடன்பாட்டில் வந்த வியங்கோள்
வினைமுற்று.                                                 24

1977.செஞ்செவே சேற்றில் தோன்றும்
     தாமரை, தேரில் தோன்றும்
வெஞ் சுடர்ச் செல்வன் மேனி
     நோக்கின விரிந்த; வேறு ஓர்
அஞ்சன நாயிறு அன்ன
     ஐயனை நோக்கி, செய்ய
வஞ்சி வாழ் வதனம் என்னும்
     தாமரை மலர்ந்தது அன்றே.

     செஞ்செவே சேற்றில் தோன்றும் தாமரை - செக்கச் செவேல்
என்று சேற்றில்தோன்றிய செந்தாமரை மலர்;  தேரில் தோன்றும் -
ஒற்றைச் சக்கரத் தேரில்உதயமான;  வெஞ்சுடர்ச் செல்வன் மேனி
நோக்கின விரிந்த
- வெம்மையான கதிர்களைஉடைய சூரியனது
வடிவத்தைப் பார்த்து மலர்ந்தன; செய்ய - சிவந்ததாகிய; வஞ்சி -வஞ்சிக்
கொடிபோல்பவளாகிய சீதையினிடத்தில்; வாழ் வதனம் என்னும் தாமரை-
உள்ளமுகம் என்னும் தாமரை;  வேறு ஓர் அஞ்சன நாயிறு அன்ன
ஐயனை நோக்கி -
செஞ்சூரியனில் மாறுபட்டு வேறொன்றான
கருஞாயிற்றை ஒத்த இராமனைப் பார்த்து;  மலர்ந்தது -மலர்ந்து
விளங்கியது.

     கருமை நிறம் உடைய இராமனை அஞ்சன ஞாயிறு என்றார்.  தடாகத்
தாமரை செஞ்ஞாயிறு  கண்டுமலர்ந்தது;  முகத் தாமரை கருஞாயிறு கண்டு
மலர்ந்தது.                                                   25