பக்கம் எண் :

குகப் படலம் 397

     ஏவிய மொழி கேளா - இராமன் நாவாய் கொணரும்படி
கட்டளையிட்ட வார்த்தையைக்கேட்டு (எங்கே இராமன் தன்னைப் பிரிந்து
சென்றுவிடுவானோ என்னும் ஏக்கறவால்);  இழிபுனல்பொழி கண்ணான் -
இறங்குகின்ற நீர் இடையறாது சொரிகின்ற கண்ணனாய்; ஆவியும்
உலைகின்றான் -
உயிர் துடிக்கப் பெறுபவனாய்;  அடி இணை
பிரிகல்லான்
- இராமனதுதிருவடிகளை விட்டுப் பிரிய மாட்டாதவனாய்;
காவியின் மலர்,  காயா,  கடல்,  மழைஅனையானை - நீலோற்பல
மலர்,  பூவைப் பூ,  கடல், மேகம் இவற்றை ஒத்த கருநீல நிறம்படைத்த
இராமனை;  தேவியொடு அடி தாழா - சீதையோடு சேர்த்து அடியில்
வீழ்ந்து வணங்கி; சிந்தனை - தன் எண்ணத்தை;  உரை செய்வான் -
கூறத் தொடங்கினான்.

     அன்பு மீக்கூர்ந்த அவலத்தின் மெய்ப்பாடுகள் புனல்பொழிகண்,
உலையும் ஆவி என்பன.இராமனுடைய நிறத்துக்கு நான்கும் உவமை.
இங்ஙனம்  பல உவமைகளை ஒருசேரக் கூறி இராமனது பேரழகினை
அனுபவித்தல் கம்பர் இயல்பு;  எடுத்துக்காட்டு:  1926.                27

1980.‘பொய்ம் முறை இலரால்; எம்
     புகல் இடம் வனமேயால்;
கொய்ம் முறை உறு தாராய்!
     குறைவிலெம்; வலியேமால்;
செய்ம்முறை குற்றேவல்
     செய்குதும்; அடியோமை
இம் முறை உறவு என்னா
     இனிது இரு நெடிது, எம் ஊர்:

     ‘கொய்ம் முறை உறு தாராய்! - கத்திரிகையால் ஒழுங்குசெய்யப்
பெற்றுப்பொருந்திய மாலையை அணிந்தவனே!; பொய்ம் முறை இலரால்-
எம் மக்கள் வஞ்சகம்அறியாதவர்கள்;  எம் புகலிடம் வனமேயால்-
எங்களுடைய இருப்பிடம் இக்காடே ஆகும்; குறைவிலெம் - எவற்றாலும்
குறையுடையோ மில்லை; வலியேமால் - (பகைவரைஅழிக்கும்) வலிமையும்
உடையேம்;  செய்ம் முறை குற்றேவல் செய்குதும் - செய்ய வேண்டிய
முறைப்படி  உனக்கு வேண்டிய சிறு தொண்டுகளைச் செய்வோம்;
அடியோமை - உன்தொண்டர்களாகிய எங்களை;  இம் முறை உறவு
என்னா
- இந்த முறையான உறவினர்கள் என்றுகருதி;  எம் ஊர் -
எங்களுடைய  ஊரிலே; நெடிது - நீண்ட  காலம்; இனிது இரு’ -
இனிமையாக இருப்பாயாக.’

     உள்ளொன்று புறம் ஒன்று அற்றவர் வேடுவர் என்பதனைப் ‘பொய்ம்
முறை இலர்’ என்றுகூறினான். காட்டில் உள்ளவர்கள் ஆதலின் உணவு
கிடைக்கும் இடம்,  பாதுகாப்பான இடம்,  நீர்நிலைகளுக்குரிய வழிகள்
அனைத்தும் எங்களுக்குப் பழக்கம் ஆதலின் உனக்கு அடிமை செய்ய
வசதியாகும் என்று