பக்கம் எண் :

40அயோத்தியா காண்டம்

தினும் - பிறகு இப்பிறப்பில் செய்து முடித்த வேள்வியால் அடைந்த
நன்மையாலும் ;  அரிதினின் பெற்றேன் - உன்னை அரிய பேறாகப்
பெற்றேன் ; இன்னம் - இன்னமும் ;  யான் இந்த அரசியல்
இடும்பையின் நின்றால்
-நான் இந்த அரச வாழ்க்கையாகிய துன்பத்தில்
இருந்தால் ;  நின்னை ஈன்றுளபயத்தினின் - உன்னைப் பெற்றதால்
அடைந்த பயனால் ;  நிரம்புவதுயாதோ - நிறைவது எவ்வாறு?

     முற்றிய வேள்வி - அசுவமேதம். புத்திரகாமேஷ்டி முதலியன.
‘மெய்யாயவேதத்துறை வேந்தருக்கு ஏய்ந்த யாரும் செய்யாத யாகம் இவன்
செய்தும் மறந்த மாதோ’ என்றுதயரதன் செய்த வேள்விகள் பற்றி முன்னும்
சொன்னார். (170)                                             64

1378. ‘ஒருத்தலைப் பரத்து
     ஒருத்தலைப் பங்குவின் ஊர்தி
எருத்தின், ஈங்கு நின்று,
     இயல்வரக் குழைந்து, இடர்உழக்கும்
வருத்தம் நீங்கி, அவ்
     வரம்பு அறு திருவினை மருவும்
அருந்தி உண்டு, எனக்கு ; ஐய ! 
     ஈது அருளிடவேண்டும்.

     ஒரு தலைப் பரத்து - ஒரு பக்கத்தில் பாரத்தையும் ;  ஒருதலை -
மற்றொரு பக்கத்தில் ;  பங்குவின் - நொண்டியாய் இருக்கும்
தன்மையையும் கொண்ட ;  ஊர்தி எருத்தின் - மனிதன் ஊர்ந்து செல்லும்
வண்டியில்பூட்டப்பட்ட பொதிமாட்டைப் போல ;  ஈங்கு நின்று -
இவ்வுலகிலிருந்து ; இயல்வரக் குழைந்து - தன்மை பொருந்த வருந்தி ;
இடர் உழக்கும் வருத்தம்நீங்கி - துன்பப்படும் அரசபாரமாகிய
வருத்தத்தினின்றும் அகன்று ;  அவ்வரம்புஅறு திருவினை - அந்த
எல்லையில்லாத முத்திச் செல்வத்தை; மருவும் அருத்திஎனக்கு உண்டு-
பொருந்தும் ஆசை எனக்கு உள்ளது ; ஐய! ஈது அருளிடவேண்டும் -
ஐயனே !  இதனை நீ கொடுக்க வேண்டும்.’

     ஒரு பக்கம் சுமக்கமுடியாத பாரமும், மற்றொரு பக்கம் நொண்டிக்
காலும்பெற்ற பொதிமாடு படும் பாட்டை ஆட்சிச் சுமையாலும்,
வயோதிகத்தாலும் தான் படுவதாகத் தயரதன்அறிவிக்கிறான். ஒருத்தலை -
ஒருதலை என்பதன் விகாரம். பரம் - பாரம். ‘அந்தமில் இன்பம்’என்று
சிலம்பும் ‘சென்றடையாத திரு’ என்று தேவாரமும் வீடுபேற்றினைக்
குறித்தமை இங்குஒப்புநோக்கத்தக்கது.                            65

1379. ‘ஆளும் நல் நெறிக்கு
     அமைவரும் அமைதி இன்றாக
நாளும் நம் குல நாயகன்
     நறை விரி கமலத்
தாளின் நல்கிய கங்கையைத்
     தந்து, தந்தையரை