பக்கம் எண் :

மந்திரப் படலம் 41

  மீள்வு இலா உலகு ஏற்றினான் ஒருமகன்,
     மேல்நாள்.

     ‘மேல்நாள் - முற்காலத்தில்; ஒருமகன் -ஒப்பற்றவனாகிய பகீரதன்;
ஆளும் நல்நெறிக்கு - தாம் நுகரக்கூடிய(வீட்டுக்குரிய) நல்ல வழிக்கு ;
அமைவரும் அமைதி இன்றாக - பொருந்தும் தன்மைதன்
முன்னோர்களுக்கு இல்லாமற்போனதால் ;  நாளும் - (அவர்கள் உய்வின்
பொருட்டு) எந்நாளும் ;  நம்குலம் நாயகன் - நமக்குக் குல தெய்வமாகிய
திருமாலின் ;  நறை விரி கமலத் தாளின் - தேன் நிறைந்த தாமரை
போலும்திருவடிகளினின்றும் ;  நல்கிய கங்கையைத் தந்து -
வெளிப்படுத்திய கங்கையாற்றைஇவ்வுலகில் கொண்டுவந்து ;  தந்தையரை
மீள்வு இலா உலகு
- தன் முன்னோர்களை(சகர புத்திரர்களை) மீண்டு
வாராத வீட்டுலகத்தில் ;  ஏற்றினான் -ஏறச்செய்தான்.’

     மக்கட் பேற்றின் பயனை விளக்க ஓர் எடுத்துக்காட்டாகப் பகீரதன்
வரலாற்றினை எடுத்துக் காட்டுகிறான். நம்குலம் - இக்குவாகு குலம். மீள்வு
இலா உலகு - திருநாடு ; வீடு.                                  66

1380.‘மன்னர் ஆனவர் அல்லர் ; 
     மேல் வானவர்க்கு அரசு ஆம்
பொன்னின் வார் கழல்
     புரந்தரன் போலியர் அல்லர் ; 
பின்னும், மா தவம் தொடங்கி,
     நோன்பு இழைத்தவர் அல்லர் ; 
சொல் மறா மகப் பெற்றவர்
     அருந்துயர் துறந்தார்.

     ‘அருந் துயர் துறந்தார் - இவ்வுலகில் அரிய துன்பத்திலிருந்து
விடுபட்டவர்கள் ;  மன்னர் ஆனவர் அல்லவர் - அரசர்களாக
வாழ்கின்றவர்கள்அல்லர் ;  மேல் - மேலுலகில் உள்ள ;  வானவர்க்கு
அரசு ஆம்
-தேவர்களுக்கு அரசனாகிய ;  பொன்னின் வார்கழல்
புரந்தரன் போலியன் அல்லர்
-பொன்னாலான நீண்ட வீரக்கழல்
அணிந்த இந்திரன் போன்றவரும் அல்லர் ;  பின்னும்- அன்றியும் ; மா
தவம் தொடங்கி
- பெருந்தவத்தைச் செய்யத் தொடங்கி ; நோன்பு
இழத்தவர் அல்லர்
- பல விரதங்களைச் செய்தவரும் அல்லர் ;  சொல்
மறா மகப் பெற்றவர்
- (பின்னர் யார் என்று வினவின்) தம் சொல்லைத்
தட்டாதமக்களைப் பெற்றவரே ஆவர்.’

     நல்ல மக்களைப் பெற்றவரே துயரம் நீங்கியவர் என்பது கருத்து.
“ஏவா மக்கள் மூவா மருந்து” என்பது ஈண்டு நினைத்தற்குரியது.        67